AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Wednesday 25 March 2015

வேலை நிறுத்தம் வெற்றி பெற சிங்கமென சிலிர்த்து எழு தோழா! சிலிர்த்து எழு!

மிக நீண்ட  கால இடைவெளிக்குப் 

பிறகு  NFPEயின் பெயரால்  
 
9 சங்கங்கள்  ஒன்றிணைந்து  நடத்தும் 

 சரித்திரம்  இது !  

கரம்  சேருங்கள் ! வெற்றி காணுவோம் !

ஊழியர் ஒற்றுமை  ஓங்குக !  

வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

 போராடுவோம் !    வெற்றி பெறுவோம் !

   போராட்ட  வாழ்த்துக்களுடன் ,

N .ராஜேந்திரன் 
கோட்ட  செயலர் 
தென் சென்னை 

--------------------------------------------------------------------------------------------------------------------------
                        கொம்பு இருப்பதை மறந்தும்  வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல்  விளைத்த கரங்கள் 
தமதென்று அறிந்திருந்தும்  கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய் 
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் ! 
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து  எழு !  உன் துன்ப விலங்குகள் தூளாகும் ! 
--------------------------------------------------------------------------------------------------------

பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப்  பார்த்தோம்  ; SUBJECTS  கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ;  தார்ணா  இருந்தோம் ;
NOTICE  போட்டோம்  ;  போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;

தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும்  அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும்  அழைத்தும் வரவில்லை  ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய் 
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய் 
எத்தனை  எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET  தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் 
என்று  அலட்சியமாய் ஒரு கடிதம்  ;

எந்த TARGET  லும் தமிழகமே முதலிடம் ;
CBS  MIGRATION  தமிழகம்  முதலில் ;
CIS  MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM  தமிழகத்தில்தானே ?
SSA  கணக்கு  பிரதமரின் PILOT  PROJECT 
ஒரு கோடி கணக்குகள்  ஒரு மாதத்தில் வேண்டும் 
இதிலும் தமிழகம்  முதலிடம்  ;

கடந்த 23.03.2015 FINACLE  இல் எடுக்கப் பட்ட கணக்கு 
பிரதம அமைச்சரின் குஜராத்தில்  541
மேற்கு வங்கத்தில்     340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு  3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு  அலுவலகம் 
திறக்க வில்லை என்பதே  செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ? 
தோழர்கள்  சிந்திய வியர்வை எவ்வளவு   ?
எடுத்துச் சொல்ல  வார்த்தை உண்டா ?

இத்தனை செய்தும்  தொழிலாளி யின் உரிமைகள் 
மறுக்கப் படுகின்றனவே  !

தொழிலாளியின்  கோரிக்கைகள் கேட்கப் படாததால் 
உரத்துச் சொல்லவே  ஆர்ப்பாட்டம்  ! தார்ணா  !
உண்ணாவிரதம்  எல்லாம் ; அந்த  குரல் கூட 
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !

திறக்கப் படுகின்ற  ஞாயிறுகளுக்குப் பதில் 
இருக்கின்ற நாளில்  வேலை நிறுத்தம் வேண்டாம்  என்று கூறி 
பேச்சு வார்த்தை நடத்திடுவோம்  என்று  இறங்கிவர 
மனமே  இல்லை  ;  தொழிலாளி  என்ன அடிமை இயந்திரமா ?

வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ; 
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது  முடிவல்ல  ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான்  !
உரிமை கேட்டு போர்  !  உழைக்கும் தொழிலாளி யின் 
உணர்வுகள் மதிக்கப்பட  போர்  !

CORPORATE  கம்பெனி களில்  கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு  !
MODEL  EMPLOYER  ஆன மத்திய அரசுத்துறையில் 
தொடர்ந்து ஞாயிறுகளில்  வேலை நாள்  ! அப்பட்டமான  அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR  LABOUR PRACTICE  என்று  தொழிலாளர் நல 
ஆணையரே  பதிவு செய்யும் அவலம்  ;

இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம்  ?  
நடத்துபவர்கள்  இந்தியர்கள் தானே  ?
அவர்களுக்கு இந்திய  அரசியல் அமைப்பு சட்டங்கள்  
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு 
அந்த மாறுதலை செய்வதற்கு  நல்ல நாள் இன்று  !

தமிழகமெங்கும்  வெற்றி  ! வெற்றி !  வேலை நிறுத்தம் வெற்றி  !
என்ற சங்கநாதம்  முழங்கப் படுகிறது  !
இந்த வேலை நிறுத்தம்  ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம்  தமிழகத்தின் ஓர்  எழுச்சி  !
ஒன்று படுவோம்  !   போராடுவோம் !
------------------------------------------------------------------------------------------------
 தொழிலாளர் நல  உதவி  ஆணையர் முன்பாக நேற்று  காலை மற்றும் மாலை  நடந்த கூட்டத்தின்  MINUTES  மற்றும் நம்  NFPE  COC  இன் கடித நகல்   ,  மாலை  CPMG  அலுவலகம் முன்பான எழுச்சிமிக்க  ஆர்ப்பாட்ட புகைப் படங்கள் கீழே பார்க்கவும் 
------------------------------------------------------------------------------------------------




.




Tuesday 24 March 2015

வெல்லட்டும் ! வெல்லட்டும் ! தமிழகம் தழுவிய NFPE சங்கங்களின் 26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

TN NFPE COC INTENSIFYING THE ONE DAY STRIKE THROUGH OUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்  போராடாது  
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
நம்முடைய NFPE  COC  யின் வேலை நிறுத்தத்தில் தலையிட வேண்டியும்  கோரிக்கைகளை தீர்த்து வைத்திட வேண்டியும்  மற்றும் ஞாயிறு / விடுமுறை தினங்களில்  பணி  செய்திட இடப்பட்ட உத்திரவுகளை ரத்து செய்திட வேண்டியும் நம்முடைய அஞ்சல் மூன்று பொதுச் செயலர் ,  இலாக்கா முதல்வருக்கு எழுதிய கடிதங்கள் கீழே :-


Saturday 21 March 2015

தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி ! தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !


SUCCESS TO THE EFFORTS OF TN NFPE COC ! SUCCESS TO TN P3 CIRCLE UNION !

தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி  ! 
தமிழக  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !

அன்புத் தோழர்களே ! அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும்  நமது மதிப்புக்குரிய  CPMG  அவர்களின் 20.03.2015 தேதியிட்ட  உத்திரவின் நகலையும்   நன்கு படித்துப் பார்க்கவும் ! 

15 ஆண்டு கால  போராட்டத்திற்கு  தற்போது  நமது  வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த  வெற்றிதான் இது !  

மாநில அலுவலகம்  மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION  என்ற பெயரில்   இருந்து வரும் ஊழியர்கள்  அவர்களது சொந்த கோட்டங்களுக்கே  திரும்ப அனுப்பப் படுவார்கள் என்ற உத்திரவே  இது !  

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று  உத்திரவிட்டுள்ள  CPMG  உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S  அவர்களுக்கு  மீண்டும்  நன்றி !  இதர கோரிக்கைகளிலும்  நாம்  உறுதியான வெற்றியைப் பெற  வேலை நிறுத்தத்தை தீவிரப் படுத்துங்கள் !

மாநிலச் செயலரின் கடித நகல் !


CPMG  அவர்களின் உத்திரவு  நகல் !
அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! 
வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டங்கள்  தமிழகம் முழுதும் வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஊழியர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில்  கரம் இணைந்த  தோழர்கள்  இதோ ! 

இது  பெற்ற சுதந்திரம் பறிபோகாமல்  காத்திட நாம் 
நடத்திடும் போராட்டம் !
உணர்வுள்ள தோழர்களே  ! ஒன்று கூடுங்கள் ! 
சங்கத்தை  முன்னிலைப் படுத்துங்கள் ! 
வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள் !  
இன்றில்லையேல் என்றும் இல்லை ! 

மிக நீண்ட  கால இடைவெளிக்குப் பிறகு NFPE யின் பெயரால்   9 சங்கங்கள்  ஒன்றிணைந்து  நடத்தும்  சரித்திரம்  இது !  கரம்  சேருங்கள் ! வெற்றி காணுவோம் !

சென்னை மத்திய கோட்டம் 

Monday 16 March 2015

வேலைநிறுத்தம் வெல்லட்டும் ! ஊழியர் ஒற்றுமை ஓங்கட்டும் !!

GO AHEAD ! ORGANISE ! 26.03.2015 ONE DAY STRIKE THROUGHOUT TAMILNADU CIRCLE TO PRESS THE COMMON DEMANDS OF ALL SECTION OF EMPLOYEES !

 தமிழகம் தழுவிய  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS  மூன்று , RMS  நான்கு, கணக்குப்  பிரிவு, நிர்வாகப் பிரிவு, SBCO , GDS , CASUAL/ MAZDOOR/PART TIME /DAILY  WAGERS  

26.03.2015  ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

மாநில அஞ்சல் நிர்வாகமே ! 
ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
TARGET  என்ற பெயரில்  கசக்கிப் பிழியாதே ! 
தொழிற் சங்க உரிமைகளை மதித்து நட ! 
தொழிலாளர்களை பழி வாங்கும் போக்கை கைவிடு !  
அனைத்து பகுதியினரின் தேங்கிக் கிடக்கும்  
கோரிக்கைகளை தீர்த்து வை !
__________________________________________________________

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக NFPE அமைப்பின் வரலாறு காணாத ஒற்றுமையின் மைல்கல்  !
13.03.2015 அனைத்து சங்கங்களின் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாபெரும் வெற்றி !
__________________________________________________________

அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது NFPE தமிழ் மாநில அமைப்பின் ஒன்பது சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 13.03.2015 அன்று திருச்சி நகரில் SRMU சங்கக் கட்டிடத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. ! NFPE இன் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள்  மிகப் பெரும் எண்ணிக்கையில்  கூடினர் !

கூட்டத்திற்கு NFPE  தமிழ் மாநில இணைப்புக்குழு தலைவர் தோழர் B.பரந்தாமன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி இணைப்புக்குழு கன்வீனர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு 60லிருந்து 70 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டது தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை ! 

26.03.2015 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் சக்தியாக நடத்திடுவோம் என NFPE போர்ப்படை தளபதிகள் சபதம் ஏற்றனர் ! 

P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி,
P4 மாநில செயலாளர் தோழர் G.கண்ணன்,
R3 மாநிலசெயலாளர் தோழர் K .ரமேஷ்,
R4 மாநிலசெயலாளர் தோழர் B.பரந்தாமன்,
GDS மாநிலசெயலாளர் தோழர் R. தனராஜ்,
OS மாநிலசெயலாளர் தோழர் T.E .ரமேஷ்,
P3 மாநில தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,
R3 மாநில தலைவர் தோழர் K.R.கணேசன்,
OS மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன்,
GDS மாநில தலைவர் தோழர் S.ராமராஜ்,
NFPE  செயல் தலைவர்  தோழர் A .மனோகரன் 
P3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி,
GDS அகில இந்திய உதவி பொதுசெயலாளர் தோழர் KC.ராமச்சந்திரன்,

ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் என சபதம் ஏற்றனர் !

வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் ... 17.3.2015 முதல் 25.3.2015 வரை. நடைபெற உள்ளன.
அந்தந்த மண்டலச் செயலர்கள்  பொறுப்பேற்று , அந்தந்த  மண்டலங் களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து  கூட்டங்களுக்கான அறிவிப்புகளை செய்திட  தீர்மானிக்கப்பட்டது.

மண்டல ரீதியான விளக்ககூட்டங்கள்
மதுரை   :  19.03.2015
கோவை  :  20.03.205.
திருச்சி  :  21.03.2015.
சென்னை  :  23.03.2015. 

இக்கூட்டங்களில் அனைத்து மாநில செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை  அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டலச்  செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , மண்டல தலைமையிடத்து  கோட்டச் செயலர்கள் இணைத்து  ஏற்பாடுகள் செய்திட வேண்டுகிறோம் !

அடக்குமுறைக்கு எதிராக,  தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக,  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் படுவதற்கு எதிராக  தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம்  !

ஊழியர்  உரிமை காக்கும் போராட்டத்தில்  களமிறங்குவோம் !

வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
ஊழியர் ஒற்றுமை  ஓங்கட்டும் !!

Wednesday 11 March 2015

VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATION UNDER CCS (RSA) RULES, 1993-CALLING OF APPLICATIONS-REGARDING.

 (Orders of THE Department of posts)

மாபெரும் வெற்றி ! வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !

STRIKE NOTICE SERVED - MASS DEMONSTRATION IN FRONT OF CPMG'S OFFICE -GRAND SUCCESS !

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  
மாபெரும் வெற்றி ! 
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில்  தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக 
தமிழகம் தழுவிய ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம்  தமிழக NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG  அலுவலகம் முன்பாக  நடத்திய கோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.  கிட்டத்தட்ட 300  தோழர்கள்  கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம்  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R  4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P  3) முன்னிலையில், NFPE  அனைத்து மாநிலச் செயலர்களும்  மற்றும் அகில இந்திய சங்கங்களின்  நிர்வாகிகளும்  கலந்துகொள்ள  எழுச்சியுடன்  நடைபெற்றது.  சிறப்பு  அழைப்பாளராக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக  பொதுச் செயலர்  தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  


ஆர்ப்பாட்டம்  முடிந்த பிறகு  அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய  26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ்  CHIEF  PMG  தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால்  DPS  HQ அவர்களிடம்  நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல்  PMG,CCR  மற்றும் PMG, MM  அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.  மேலும்  அனைத்து PMG க்களுக்கும் ,  தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது. 


13.03.2015 அன்று திருச்சியில் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் 


கூட்டத்தின் முடிவில்,  வேலை நிறுத்தம் குறித்து அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள  எதிர்வரும் 13.03.2015 அன்று  SRMU  சங்கக் கட்டிடம்  திருச்சியில் காலை 10.00 மணியளவில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு NFPE  இன்   அனைத்து  மாநிலச் சங்கங் களின்  மாநில நிர்வாகிகள் அனைவரும் , கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டது.  


அனைத்து மண்டலங்களிலும்  வேலைநிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடவும் ,  அதில் அனைத்து மாநிலச்  செயலர்களும்  கலந்து கொள்வதெனவும்  தீர்மானிக்கப்பட்டது.  மேலும்  தமிழகத்தின் அனைத்துக் கோட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடுவதெனவும்  அதில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  அடுத்த வாரத்தில் இருந்து  கலந்துகொள்ளச் செய்வ தெனவும்  தீர்மானிக்கப் பட்டது. 


எனவே  மாநிலச் சங்க நிர்வாகிகள் , வேறு  காரணம் எதுவும் கூறாமல்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களில்  கலந்துகொள்ள  தயார் நிலையில் இருக்குமாறும்  கேட்டுக் கொள்கிறோம்.  வேலை நிறுத்த  நோட்டீஸ் மற்றும்  கோரிக்கைகள் அடங்கிய  மனுவின் நகல் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும்  தனியே  அனுப்பப்படும்.  வேலை நிறுத்த நோட்டீஸ்  மற்றும்   கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த புகைப் படங்களில் சில  கீழே  பார்க்கலாம்.