Wednesday, 25 September 2013

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும்.

7–வது ஊதியக்குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த குழுவின் பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு  தற்போது  ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அகவிலைப்படியில் 50 சதவீதத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். எங்கள் இந்த கோரிக்கையை ஊதியக்குழு பரிசீலனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment