NFPE சம்மேளன செயல் தலைவர் தோழர். C. சந்துரு அவர்கள்
இலாக்கா பணி நிறைவு

சிரித்த முகமாக, சீரிய சிந்தனையாளராக,சங்கத்தில்
கருத்து வேறுபாடுள்ள தோழர்களிடையிலும் ஒற்றுமைக்கு பாலமாக NFPE இயக்கத்தின் தூணாக, NCA எழுச்சி பாசறையின் தலைவர்களில் ஒருவராக..... இப்படிப் பல முகங்கள் தோழர்
சந்துருவுக்கு உண்டு.
சந்துரு இன்று (30.04.2013) இலாக்கா பணி
நிறைவு செய்கிறார். அவர்தம் தொழிற் சங்கப் பணி நிச்சயம் தொடரும். அவரது அனுபவமும்
அறிவும் எங்களுக்கு வழிகாட்டியாக அமையும். இந்தப் பணி நிறைவு நாளில் அவர் குடும்பத்தோடு நீண்ட
காலம் ஆரோக்கியமாக எல்லா வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ்ந்திட தென் சென்னை கோட்டம் மனதார வாழ்த்துகிறது.
- வ.வெங்கட்ராமன்
கன்வீனர்