TN JCA DECISIONS ON 12-13 FEB. 2014 - 48 HOURS STRIKE ANNOUNCED BY NFPE AND FNPO
ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
48 மணி நேர வேலை நிறுத்தம் !
அன்பான NFPE சம்மேளனத்தின் அனைத்து உறுப்புச் சங்கங்களின் தமிழ் மாநிலச் சங்க நிர்வாகிகளே, கோட்ட/ கிளைச் செயலர்களே ! உங்கள் அனைவருக்கும் தமிழக அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் சார்பாக போராட்ட வணக்கங்கள் !
NFPE மற்றும் FNPO சம்மேளனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள பிப்ரவரி 12-13, 2014 தேதிகளில் நடைபெறவிருக்கும் 48 மணி நேர வேலை நிறுத்தம் சிறப்பாக தமிழகத்தில் நடத்துவது குறித்து முடிவுகள் எடுத்திட , நேற்று (17.01.2014) மாலை சுமார் 06.00 மணியளவில் , தமிழகத்தின் NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் அனைத்து மாநிலச் செயலர்கள் அடங்கிய JCA வின் கூட்டம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனத்தின் அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் கன்வீனர்களான தோழர். J . இராமமூர்த்தி மற்றும் தோழர். G .P.முத்துக்கிருஷ்ணன்ஆகிய இருவரும் கூட்டாக தலைமை யேற்று நடத்தினர்.
அனைத்து மாநிலச் செயலர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு தங்களை கருத்துக்களை எடுத்துரைத்தனர் . கூட்டத்தில் இறுதியாக கீழ்க் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.
1. எதிர்வரும் 25.01.2014 சனிக்கிழமை மாலை, சென்னை பெருநகர மண்டலம் நீங்கலாக , இதர மண்டலங்களான திருச்சி, மதுரை, கோவை ஆகிய மண்டலத் தலைமையகங்களில், மண்டல அளவிலான வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என்றும்,
அந்தந்த மண்டலங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்டலத் தலைமையகத்தில் உள்ள கோட்டங்களின் செயலாளர்கள் JCA வாக இணைந்து , இந்த வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது . இதில் கலந்துகொள்ளும் மாநிலச் செயலர்கள் விபரம் வருமாறு :-
திருச்சி மண்டலம்
தோழர்கள்
J . இராமமூர்த்தி , மாநிலச் செயலர் P 3, NFPE
P . குமார், மாநிலச் செயலர், R 3, FNPO
K . ராஜேந்திரன், மாநிலச் செயலர் ,R 4, NFPE
R . தனராஜ், மாநிலச் செயலர், GDS , NFPE
P . கோதண்டராமன், GDS , FNPO
மதுரை மண்டலம்
தோழர்கள்
G .P . முத்துகிருஷ்ணன், மாநிலச் செயலர், P 3, FNPO
K . சங்கரன், மாநிலச் செயலர், R 3, NFPE
S . அப்பன்ராஜ் , மாநிலச் செயலர், NFPE , SBCO
கோவை மண்டலம்
தோழர்கள்
கோபு கோவிந்தராஜன் , மாநிலச் செயலர், P 4, NFPE
K . குணசேகர் , மாநிலச் செயலர் , P 4, FNPO
A . ரகுபதி உமாசங்கர் , மாநிலச் செயலர் , ADMIN , NFPE
2. எதிர்வரும் 28.01.2014 செவ்வாயன்று சென்னை பெரு நகர்ப்பகுதியில் உள்ள கோட்ட/ கிளைகளின் தோழர்களை ஒருங்கிணைத்து CPMG அலுவலக வளாகத்தில் மதியம் 12.00 மணியளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி JCA சார்பாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் எனவும்,
வேலை நிறுத்தத்திற்கான சம்மேளனங்கள் 21.01.14 அன்று அளிக்கும் நோட்டீஸ் நகலை CPMG அவர்களுக்கு அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு அளிப்பது எனவும் ,
எதிர்வரும் 28.01.2014 அன்று அதே நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சென்னை பெருநகர் நீங்கலாக , சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள இதர கோட்ட/ கிளைகள் மற்றும் தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றும், 21.01.2014 இல் அளிக்கப்படும் சம்மேளன வேலை நிறுத்த நோட்டீஸ் நகலை நிர்வாகத்திற்கு அந்தந்த கோட்டங்களில் அளிப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது .
3. சென்னை பெருநகர மண்டலத்தின் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் எதிர்வரும் 10.02.2014 திங்கள் அன்று மாலை 06.00 மணியளவில் JCA சார்பாக CPMG அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL அல்லது அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்துவது என்றும் இதில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்வது என்றும் முடிவு எடுக்கப் பட்டது .
4. தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள JCA வின் மாநிலச் சங்க/ அகில இந்திய சங்க/ சம்மேளன நிர்வாகிகளை அழைத்து சிறப்புக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும் , கோரிக்கைகளை விளக்கியும் , இதற்கான நோட்டீஸ் உம் அந்தந்த கிளைகளில் இருந்து தனித்தனியே அனைத்து ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. இதன் நகல் மாநிலச் சங்கங்களுக்கு அனுப்பப் படவேண்டும் என்றும் கோரப் பட்டது.
5. கோரிக்கைகள் மற்றும் சிறப்புக் கூட்டங்கள் குறித்து தமிழக JCA சார்பில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது . வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி கோரிக்கைகளை வென்றிட அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது .
இந்த செய்திகளைத் தாங்கி நோட்டீஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படின் அதற்காக உங்கள் வேலைகளை ஒத்தி வைத்திட வேண்டாம் என்றும் , இந்த வலைத்தள செய்தியை பார்த்த உடனே இதற்கான ஏற்பாடுகளை உடன் செய்திட வேண்டும் எனவும் தமிழக JCA சார்பில் கோருகிறோம். இந்த செய்தியை பார்த்த நிர்வாகிகள் பார்க்காத இதர நிர்வாகிகளுக்கு உடன் தெரிவித்து செயலாற்றிட வேண்டும் என்றும் வேண்டுகோள் அளிக்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
J . இராமமூர்த்தி , கன்வீனர் ,
அஞ்சல் - RMS -MMS- GDS இணைப்புக் குழு ,
தமிழ் மாநிலம் .
=========================================
குறிப்பு :-
பிப்ரவரி 12-13, 2014 - 48 மணி நேரவேலை நிறுத்தம் அனைத்து மத்திய அரசு ஊழியர் பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே இந்த வலைத்தளத்தின் மூலம் தொடர்ந்து உங்களுக்குத் தெரிவித்து வருகிறோம். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தி தமிழக மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன அறிக்கை வாயிலாக உங்களுக்கு கிடைக்கும்.
ஏற்கனவே நாம் அறிவித்தபடி நடைபெற இருந்த கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது . கீழே காண்க :-
எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்
தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக
சென்னை எழும்பூர் SRMU அலுவலகக் கட்டிடமான நக்கீரன் அரங்கத்தில்
வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது .
இதில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது பொதுச் செயலருமான
தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்
கலந்துகொண்டு வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும் முன் கூட்டியே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .
சென்னை நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் இந்தக் கூட்டத்தின் தவறாமல் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் !
தோழமையுடன்
J . இராமமூர்த்தி
மாநிலத் தலைவர்
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்
தமிழ்நாடு .
===================
No comments:
Post a Comment