அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி'
தென் சென்னை கோட்டம், சென்னை 600016
சுற்றறிக்கை எண்: 2 தேதி:05.09.2013
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
உங்கள் அனைவருக்கும் கோட்டச் சங்கத்தின் அன்பு வணக்கங்கள். நமது கோட்டம் புதிதாக உருவாகப்பட்டபோது கிண்டி தொழிற்பேட்டையை உள்ளடக்கிய அதன் எல்லைகளும் தற்போது மேலும் பெருங்குடி முதல் சோழிங்கநல்லூர் வரை நீண்டு தொழில் நுட்ப பூங்காக்கள் நிறைந்து பரந்து விரிந்த கோட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தல் அன்றைய ஊழியர்களின் எண்ணிக்கை தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை என்பது கண் கூடாக காண முடிகின்றது. ஆம்! இன்றைய வேலைப்பளு மற்றும் ஆட்பற்றாக்குறை காரணம் தான் என்ன? நிர்வாகம் Establishment Branch பிரிவில் காலியிடங்களை சரியாக கணக்கிட படவில்லை என்பதுதான் உண்மை. இதனால் ஊழியர்கள் எவ்விதமான விடுப்பும் எடுக்க முடிய வில்லை. அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ள இந்த சூழ்நிலையில் minus balance
show-cause notice மூலம் கோட்ட நிர்வாகம் ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிர்வாகத்தின் செயல்பாடுகள்
நம்முடைய இலாக்காவில் கணினிமயமாக்கப்படும் போது அவசரகதியாக சேமிப்பு வங்கிப்பிரிவில் DATA ENTRY செய்ததை எவரும் மறந்துவிட முடியாது. HOவில் SO dataகளை கோண்டு Out sourcing மூலம் Data entry செய்யப்பட்டு அதனை SO களில் upload செய்யப்பட்டு முன்னுக்கு பின் முரணான SB இருப்புக்கள். ஒவ்வொரு HOவிலும் SBCO Branchல் UP (un
posted amount) என்பது இருக்கும் அதை எந்தெந்த அலுவலகத்தில் எவ்வளவு உள்ளது என்று சரிபார்த்து மற்ற கோட்டங்களில் சரிசெய்தது போல் சரிசெய்யாமல் மொத்தமாக SB 62 வில் இன்னும் adjust செய்யமல் பல லட்சம் உள்ளது. ஒவ்வொரு தனிநபரின் கணக்குகளும் மிகச்சரியாக கணினியில் மாற்றம் செய்திட வேண்டும் என்பதை மனதில் கொள்ளாமல், இலாக்காவில் சொன்னார்கள் என்று மேல் அதிகாரிகளும், மேல் அதிகாரி சொன்னார் என்று கீழ் அதிகாரிகளும், "வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் .. ஆமாம்.. ஆமாம் நான் கூட பார்த்தேன் .. நாலு காக்கை பறப்பதை" என்பதுபோல, அதற்கான துறைசார்ந்த அறிவைச் செலுத்தாமல் கீழ்மட்ட ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சேமிப்பு வங்கிக் கணக்குகளை குப்பைக் காடாக்கிய கொடுமை நம்துறை தவிர வேறு எந்த துறையிலும் நடந்திருக்க சாத்தியக் கூறு இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இவை சரி செய்யவே முடியவில்லை . விளைவு , BO, SO, SO SB ,
SBCO , ICO(SB), MAIL OVERSEER, IPO, ASP , SPOS., என்று ஆயிரம் CHECKING MECHANISM இருந்தும் கூட கோடிக்கணக்கில் பல அலுவலகங் களில் MULTIPLE FRAUD. போதாதற்கு CORE BANKING கூத்துகளில்...................... கணக்குகளின் இருப்புகள் சரி செய்யப்பட வேண்டிய அவசரம் மீண்டும் ...... பார்த்தால் மீண்டும் கோடிக் கணக்கில் MINUS BALANCE.................
இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமே... எப்படி செய்வது? இருக்கவே இருக்கிறான்... எதையும் சுமக்கும் பொதிக் கழுதை.... அப்பாவி ஆம்! SOவில் அன்று பணிபுரிந்த அஞ்சலக எழுத்தன்.... பிடித்து மாட்டு ... பணத்தைக் கட்டு ... இல்லையானால் விதி 16, விதி 14.. பணி ஒய்வு பெறுபவரா ? ... நிறுத்து ஓய்வுக் கால பலன்களை ... "ஐயோ வேண்டாம்.. ஆளை விட்டுவிடு.. நான் VR இல் செல்கிறேன்" என்றால்.. அதுவும் கிடையாது ... நீ இங்கேயே சாக வேண்டும் இல்லையேல் பணத்தைக் கட்ட வேண்டும் .... இதுதான் இன்றைய நிர்வாகத்தின் மோசமான பார்வை ... இவற்றை எதிர்கொள்ள சட்டம் இருக்கிறதா ? நிச்சயம் இருக்கிறது ... ஆனால் நம்மில் பலருக்கு தெரிவதில்லை ...
MINUS BALANCE என்று கூறி நேரிடையாக சம்பளப் பிடித்தம் செய்திட முடியாது ... சட்டப் படி SHOW CAUSE NOTICE வழங்கப் பட வேண்டும் ... இப்படி SHOW CAUSE NOTICE வழங்காமல் ஊதியத்தில் பிடித்தம் செய்திட உத்திரவிடப் பட்டால் உடன் நமது கோட்டச் செயலரை அணுகுங்கள் ... அவர்கள் நிச்சயம் கோட்ட அதிகாரியிடம் சட்ட விதிகளை எடுத்துக் காட்டி , இது தவறான அணுகுமுறை என்பதை நிலை நிறுத்துவார் ... SHOW CAUSE NOTICE வழங்கப் பட்டால் , நமது செயலரை அணுகி அதற்கு உரிய வகையில் பதில் தயார் செய்து அனுப்ப உதவிடக் கோருங்கள் ..... உங்களுக்கு .... உங்கள் மீதான தவறு சரிவர நிரூபிக்கப் பட ... அதற்கான ஆவணங்கள் உங்களிடம் காட்டப் பட வேண்டும்..அதன் நகல்கள் உங்களுக்கு வழங்கப் பட வேண்டும் ... MINUS BALANCE க்கு உரிய DEPOSITOR இடம் இருந்து உங்கள் கோட்ட அதிகாரி உரிய தொகையை வசூல் செய்திட சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவை எதுவும் செய்யாமல் உங்களிடம் எந்தத் தொகையும் பிடித்தம் செய்திட சட்டம் அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கிட வில்லை ....
உங்களின் ... தொழிற் சங்கத்தின்...எல்லாவித முயற்சிகளையும் மீறி ... அடாவடியாக உங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்திட உத்திரவிடப்பட்டால் நிச்சயம் நீதி மன்றம் உங்களுக்கு பாது காப்பு வழங்கும் ... அதற்கு செல்ல உங்களுக்கு தொழிற் சங்க நிர்வாகிகள் உதவி செய்வார்கள்... அதற்கு கூட்டாக... தனியாக...கோட்டச் சங்கம் சேர்த்து...என்று பலவகையில் வழக்கு தொடுத்து தடையாணை வாங்கிட .... அந்தந்த சூழலுக் கேற்ப .... அந்தந்த CASE க்கு ஏற்ப .. வழி வகை உள்ளது.
அதுவும் போதாதென்று கம்ப்யூட்டர் சீட், பேப்பர் ஸ்டிக்கர் எதுவுமே சரியாக கோட்ட நிர்வகத்தால் வழங்க படுவதில்லை தினமும் கோட்ட அலுவலகத்திற்கு சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை. அதுவும் தரமற்ற ஸ்டிக்கர்களை வாங்கி நமது அஞ்சலகத்தில் உள்ள பிரிண்டரில் ரிப்போர்ட் எடுப்பதற்குள் ஊழியர் படும் பாட்டிற்கு அளவே இல்லை இது தான் இன்றைய நிலை. மாதந்திர பெட்டியில் எடுத்து சொன்னாலும் தற்காலிக முடிவு மட்டும் எடுக்கப்படுகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கும் சோளிங்கநல்லூர் மடிப்பாக்கம் போன்ற அலுவகங்களின அவல நிலையை எத்தனையோ முறை எடுத்து குறியும் நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை.
இது போன்ற நிர்வாக சீர்கேடுகளை நாம் பட்டியல் இடமுடியும் இவற்றிக்கு கோட்ட நிர்வாகம் ஒரு சரியான தீர்வு காணப்படவில்லையெனில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் நாம் போராட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தயராக இருக்க வேண்டுகிறோம்.
உறுப்பினர் சந்தா ரூபாய் 50/-
திருவனந்தபுரம் அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி அனைத்து மாநில செயலர்களும் முழு நேர தொழிற்ச் சங்க (அயற்பணி) பணியாற்ற வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு நமது உறுப்பினர் சந்தா ரூபாய் 30/- இல் இருந்து ரூபாய் 50/- ஆக மறுகிறது எனபதனை நமது உறுப்பினர்களுக்குதெரிவித்து கொள்கிறோம். இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது . இதன்அடிப்படையில் பகுதி பணமும் ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம் ------ ரூ. 24.50
மாநில சங்கம் ------ ரூ. 15.00
மத்திய சங்கம் ----- ரூ. 8.00
சம்மேளனம் ---- ரூ. 2.50
------------------------------
ரூ. 50.00
------------------------------
போயாச்சி! போயாச்சி! மெக்கன்சி கன்சல்டன்சி திரும்பி போயாச்சி!
அஞ்சல் துறைப் பணிகளை சீரமைக்க ஆலோசனை வழங்க இலாக்காவால் மெக்கன்சி கன்சல்டன்சி என்னும் அமெரிக்க நிறுவனம் அமர்த்தப்பட்டது. ஆனால் அந்த நிறுவனமோ பல நாடுகளிலும் நல்ல லாபத்தில் இயங்கிய பல கம்பெனிகளை தங்களது அபத்தமான ஆலோசனைகளால் நட்டத்தில் ஆழ்த்தி மூடுவிழாவும் நடத்திய நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனத்தை நமது துறைக்கு ஆலோசனை வழங்குவதற்கு ரூ.100 கோடிக்கு கட்டணம் கொடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் நியமித்தது. ஆனால் நிலைமை தாறுமாறாக மாறுவதைஉணர்ந்து கொண்ட நமது இலாக்கா M N O P –L1, L2 பிரிப்பக முறையை கைவிட்டு முந்தைய முறையில் இனி அஞ்சல் பிரிப்பகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. ஒன்றுபட்ட நமது போராட்டத்தின் வெற்றி இது ஆகும்.
புதிய பென்ஷன் மசோதா திட்டம்
அடுத்த தாக்குதலாக நமது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் மசோதா திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் படி மத்திய அரசு பணியில் 2004 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு தன் பங்காக ஒரு தொகையை செலுத்தி அப்பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை பிரித்து கொடுக்கும் அபத்தமான திட்டத்தை நடைமுறை படுத்த முயலுகிறது. இதை அணைத்து மத்தியஅரசு ஊழியர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறினால் அடுத்து பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர் அனைவருக்கும் நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்து வருகிறது. எனவே பாராளுமன்றத்தில் இத்திட்டம் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள மத்திய/மாநில அரசு ஊழியர்கள் 3.9.2013 அன்று அணைத்து மத்திய அரசு அலுவலகம் முன்பும் மாபெரும் ஆர்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதின் அடிப்படையில் நமது N F P E சம்மேளனமும் அணைத்து தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன் படி நமது கோட்டத்தில் புனித தாமஸ் மலை தலைமை அஞ்சலகம் முன்பு 3.9.2013 அன்று அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE) தலைவர்களின் கூட்டு தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைத்து பகுதி தோழர்களும் /தோழியர்களும் முக்கியமாக 2004 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் சிறப்பாய் நடைபெற்றது.
முயன்றால் முடியும் ... தொழிற் சங்க உணர்வு கொள்ளுங்கள் ..... உதவிகளை கேட்டுப் பெறுங்கள்...உங்களுக்கு உதவிடத்தானே நம் தொழிற் சங்க அமைப்பு? அன்றில் வேறு எதற்கு ?......... உணர்வு கொள்வோம் ....... ஒன்று கூடுவோம்......உயிரோட்டத்துடன் தொழிற்சங்கப் பாதையில் ஊழியர்களை பயணிக்க செய்வோம்.
தோழமையடன்,
N .ராஜேந்திரன்
செயலர்
No comments:
Post a Comment