மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி ! இந்திய முழுமைக்கும் நாம் எடுத்த பிரச்சினை வழி ஏற்படுத்தப்போகிறது !
இந்தப் பிரச்சினையில் முழு கவனம் செலுத்திய
நமது பொதுச் செயலர்
தோழர் கிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS ,
நமது துணைப் பொதுச் செயலர் தோழர். N.S. ஆகியோருக்கு
நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
கடந்த 24.07.2012 இல் நடைபெற்ற நமது மாநில கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் (RJCM ) நம்மால் எடுக்கப் பட்ட பிரச்சினை , CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் URBAN AGGLOMERATION ஆக அறிவிக்கப்பட்டும் அல்லது மக்கள் தொகை உயர்ந்தும் உள்ள நகர விரிவாக்கப் பகுதிகளுக்கு அல்லது பெருநகரப் பகுதிகளுக்கு உயர் வீட்டு வாடகைப்படி வழங்கப் பட வேண்டும் என்பதே . RJCM MINUTES நகலை கீழே பார்க்கவும் . SL . 19 ITEM 31 இல் நமது SUBJECT இக்கு , ' IT IS A SUBJECT MATTER TO BE DECIDED AT DIRECTORATE LEVEL' என்று நமது CPMG பதில் அளித்துள்ளார். CENSUS புள்ளி விபர அடிப்படியிலேயே உயர் வீட்டு வாடகைப் படி வழங்கலாம் என்று நாம் வலியுறுத்தியிருந்தோம்.
CPMG அவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்காது போனதால் உடன் இந்த பிரச்சினை குறித்து நமது அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
கடந்த 17.06.2013 அன்று JCM இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிட நாம் SUBJECT அனுப்பியிருந்தோம் . அதன் நகலையும் 17.06.2013 அன்றே நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை கீழே பார்க்கவும் .
இதன் அடிப்படையில் கடந்த 17.07.2013 அன்று நமது பொதுச் செயலரால் இந்த பிரச்சினை நமது துறை முதல்வருக்கு எடுத்துச் செல்லப் பட்டது . தற்போது இலாக்காவில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து CPMG மற்றும் GM FINANCE களுக்கு CENSUS 2011 அடிப்படையில் URBAN AGGLOMERATION ஆக அறிவிக்கப் பட்டும் , மக்கள் தொகை உயர்வாலும் உள்ள பகுதிகளை கண்டறிந்து , அந்த பகுதிகளுக்கு உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட உரிய PROPOSAL களை அனுப்பிடுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது. அந்தக் உத்திரவின் நகலையும் கீழே பார்க்கவும்.
தற்போது சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு சென்னை பெருநகர HRA கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது போலத்தான் கோவை, திருச்சி, மதுரை, சேலம் , ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளும் ஆகும்.
கோட்ட/ கிளைச் செயலர்கள் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல் பட்டு அந்த அந்த பகுதி கோட்ட அதிகாரிகளுடன் பேசி CENSUS 2011 அடிப்படையில் உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட உரிய பகுதிகளை பரிந்துரைக்கும் படி செயல் பட வேண்டுகிறோம். URBAN AGGLOMERATION பகுதிகள் குறித்த விபரம் GOOGLE SEARCH இல் CENSUS 2011 என்று TYPE செய்து தேடினால் கிடைக்கும்.
உடன் உங்கள் பகுதிகளை கண்டறிந்து செயலாற்றிட வேண்டுகிறது மாநிலச் சங்கம் . கோட்ட அதிகாரிகள் சரியாக பதில் அளிக்க வில்லையானால் மாதாந்திரப் பேட்டியில் SUBJECT வைத்து பதில் பெறவும்.அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைத்திடவும். நன்றி ..
இந்த செய்தியை COPY செய்து பிரதி எடுத்து உங்கள் பகுதி தோழர்களுக்கு கொடுக்கவும்.
No comments:
Post a Comment