AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday, 22 November 2013

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி'

தென் சென்னை கோட்டம், சென்னை 600016
Web site: http://p3chsouth.blogspot.com                 e-mail:www.p3chsouth@gmail.com
 N.வாசுதேவன்             N.ராஜேந்திரன்                 G.ரவி
         தலைவர்                 செயலர்                       நிதி செயலர்
   9940103958                       9444906716                        9444999630

சுற்றறிக்கை எண்: 3                                                             தேதி:22.11.2013
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

உங்கள் அனைவருக்கும் கோட்டச் சங்கத்தின் அன்பு வணக்கங்கள்.

அஞ்சலி!

நமது அஞ்சல் மூன்றின் முன்னணி தோழர்கள் G.பொன்னுசாமி, சபாபதி ஆகியோரின் மறைவிற்கும், அவர் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தினம் தினம் பிச்சை!

நமது கோட்டத்தின் அவல நிலையை கோட்ட நிர்வாகத்திடம் எவ்வளவோ எடுத்து கூறியும் "செவிடன் காதில் சங்கு ஊதிய நிலையில்” தான் கோட்ட நிர்வாகம் உள்ளது.  குறிப்பாக பேப்பர் Computer Report sheet வாங்குவதற்க்கு நாம் படும் பாடு அளவே கிடையாது. தினமும் கோட்ட நிர்வாகத்திடம் பிச்சை எடுக்கும் அவலநிலையே தொடர்கிறது.  அலுவலகங்கள் இயங்க தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட ஊழியர்கள் வேலை செய்வதற்கு உண்டான நல்ல சுழ்நிலை நமது கோட்டத்தில் துளியளவு கூட கிடையாது, விடுப்பு எடுக்க முடிய வில்லை, ஆயிரம் கேள்விகள்! மருத்துவ விடுப்பு எடுத்தாலும் முன்னரே நிவாகத்திடம் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமாம். உடல்நலக் குறைவு என்பது முன்னரே நம்மிடம் சொல்லித்தான் வருமா? மூத்த தோழர் G.பொன்னுசாமி அவர்களுக்கு  உடல்நிலை சரியில்லாத மோசமான (படுக்கையில் இருந்த) சூழ்நிலையிலும் அவரை Medical Boardக்கு அனுப்பியது நிர்வாகம்தானே!  அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தானே அவர் மரணமடைந்தார் என்பதை மன வேதனையுடன் அவர் குடும்பத்தார் கூறுவதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு!

நம்முடைய இலாக்காவில் கணினிமயமாக்கப்படும் போது அவசரகதியாக சேமிப்பு வங்கிப்பிரிவில் DATA ENTRY  செய்ததை எவரும் மறந்துவிட முடியாது. HOவில் SO dataகளை கொண்டு Out sourcing மூலம் Data entry செய்யப்பட்டு அதனை SOகளில்  upload செய்யப்பட்டு முன்னுக்கு பின் முரணான SB இருப்புக்கள். அதன்  விளைவு தான் என்பதை நாம் திரும்ப திரும்ப எடுத்து கூறியும் minus balance recoveryயை HO SO, SBCO & SOவில் வேலை செய்தவர்களுக்கு equal share  போட்டு HO SO  & SBCOவில் வேலை செய்தவர்களை record இல்லை என விடுவித்து, பாவம் SOவில் வேலை செய்தவர்களுக்கு மட்டும் recovery போடும் நிர்வாகம்  SPM களுக்கு பல முறை நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பி, "அந்த அந்த அலுவலகங்களில் SB counterகளில் யார்? யார்? வேலை செய்தார்கள் என குறிப்பிட்ட தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும். இல்லையேல் SPMகளுக்கு recovery போடப்படும்" என கடிதங்கள் அனுப்பியதன் விளைவாக, SPMகளுக்கு response  என்றவுடன்  தான்  தப்பித்தால் போதும் எனக் கூறி அன்றைய தேதியில் அந்த அலுவலகத்தில் வேலை செய்யாதவருக்கும் ஏன்? இன்னும் சொல்ல வேண்டும் எனில் அன்றைய தேதியில் appointment ஆகாதவருக்கும் சகட்டு மேனிக்கு recovery  notice அனுப்பப்பட்டுள்ளது.  ஆனால்  அந்த நேரத்தில்  HO SO& SBCOவில் வேலை செய்தவர்கள் ஒழுங்காக OM போட்டிருந்தால் இந்த minus balance வர வாய்ப்பே இல்லை. ஆனால் நிர்வாகமோ  HOSO & SBCOவில் வேலை செய்தவர்களை record  இல்லை என விட்டுவிட்டு ஆட்பற்றாக்குறையிலும் நிர்வாகம் upload  செய்த balance  உண்மை என நம்பி வேலை செய்த அப்பாவி SO ஊழியர்களுக்கு recovery என்பது விந்தையானது.
 யாரை திருப்தி படுத்ததுவதற்கு? அல்லது யாரை விடுவிப்பதற்கு? இந்த வேலை. ஆம்! ஒரு கண்ணில் வெண்ணெய்!  ஒரு கண்ணில் சுண்ணாம்பு!  பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் எழுதி அவர்களே குறிப்பிட்ட அலுவலகம் சென்று record  சரி பார்க்க வேண்டுமாம்.  எற்கனவே ஆட்பற்றாக்குறை. விடுப்பு கூட கிடையாது எப்படி voucherகளை சரிபார்ப்பது?  தயவு செய்து நிர்வாகம் சரியான நிலையை எடுக்க வேண்டும்.  எவ்வளவோ un adjusted amount  இருக்கிறது. அதனை இன்னும்  Agreement மூலம் சரி செய்யாமல், உரியவரிடம் அதனை recovery  செய்வதற்கு விதியை சரியாக பயன்படுத்தாமல், மேலிடத்தை திருப்தி படுத்துவதற்காக அலுவலர்களை மன உளைச்சலுக்கு  ஆளாக்காதீர்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. தயவு செய்து சோதிக்காதீர்கள். இதற்கு தீர்வுகாண நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் இல்லையேல் நிச்சயம் நீதிமன்றம்   உங்களுக்கு  பாது  காப்பு  வழங்கும் .. அதற்கு செல்ல உங்களுக்கு தொழிற் சங்க நிர்வாகிகள் உதவி செய்வார்கள்...  அதற்கு கூட்டாக... தனியாக... கோட்டச் சங்கம் சேர்த்து... என்று பலவகையில் வழக்கு தொடுத்து தடையாணை வாங்கிட... அந்தந்த சூழலுக் கேற்ப.... அந்தந்த CASEக்கு ஏற்ப.. வழி வகை உள்ளது.

ஓர் பாடமாக அமையட்டும்!

எத்தனையோ காலியிடங்கள் நிரப்பப்படவில்லை அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும்  இதுவரை எட்டப்படவில்லை நிர்வாகம் Establishment பிரிவில் காலியிடங்களை சரியாக கணக்கிடப்  படவில்லை என்பதுதான் உண்மை. இதனால் ஊழியர்கள் எவ்விதமான விடுப்பும்  எடுக்க முடிய வில்லை.  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.  
இந்த சூழ்நிலையிலும் வேலை செய்கிறவர்களையும் ஏன்  நீங்கள் வேலை செய்கிறீர்கள்? விருப்ப ஓய்வு  எடுத்து போய்விடுங்கள்! என்று மிரட்டப்  படுகிறார்கள் குறிப்பாக மூத்த  தோழர் B.Sekar அவர்கள் விருப்ப ஓய்வினை எடுத்துள்ளார். அவருக்கு உடல் நிலை மோசமாக காரணம் என்ன? இலாக்காவில் System Administrator ஆக வேலை செய்து இரவு பகல் என்று  பாராமல் அலுவலகமே  கதி என இருந்து சரியான நேரத்தில் சாப்பிடாமல், இன்று அவரையே நிர்வாகம் விருப்ப ஓய்வு கொடுக்க வைத்து, மனதில் நிம்மதியில்லாமல் தான்  செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இம்மாதம் 30.11.2013ல் ஒய்வு பெற கடிதம் கொடுத்துள்ளார் என்பது நிர் வாகத்திற்கு நிம்மதிதானே?  ஆம்! இது மற்றவர்களுக்கும் ஓர் பாடமாக அமையட்டும்.
மாற்றம் வேண்டும் இல்லையேல் ………….
வாடகை கட்டிடத்தில் இயங்கும் சோளிங்கநல்லூர், மடிப்பாக்கம் போன்ற அலுவகங்களின் அவல நிலையை எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எத்தனை அலுவலகங்கள் வாடகை அலுவலகத்தில் இயங்குகின்றன? அடிப்படை வசதிகள் எந்த அலுவலகத்திலாவது இருக்கின்றதா? அலுவலகத்தில் நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த எந்த முயற்சியும் நிர்வாகத்தால் இதுவரை எடுக்கப்படவில்லை  என்பது தான் உண்மை. இது போன்ற நிர்வாக சீர்கேடுகளை நாம் பட்டியல் இடமுடியும். இவற்றிக்கு கோட்ட நிர்வாகம் ஒரு சரியான தீர்வு காணப்படவில்லையெனில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் நாம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தயாராக இருக்க வேண்டுகிறோம். ஊழியர்களின் மன க் குமுறல்கள் ஒன்றா? இரண்டா? இந்த சுழ்நிலையிலும் மூத்த ஊழியர்கள் கூட Deputation அனுப்பப் படுகிறார்கள். என்றுமாறும் இந்த சுழல்? மாற்றம் வரவேண்டும். இல்லையேல் மாற்றத்தை உருவாக்குவோம்.
தலைமை அஞ்சலகத்தின் அவலநிலை!

பரங்கி மலை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அவலநிலை இந்த கட்டிடத்தில் தான் SPCC யும் Logistic  postம் இயங்குகின்றன. இந்த நிலைமையில் பாத் ரூம் கழிவு நீர் மற்றும்  septic tank  நிரம்பி வழிந்து வெளியில் சென்று கொண்டிருந்தது. தற்போது அதனை வெளியே வரவிடமால் உள்ளே நிரம்பி Office க்குள் வருகிறது. சரியான Drainage கிடையாது. Drainageக்கு மேலே பில்டிங் கட்டியதன் காரணத்தால் அதனை சரி செய்வதற்கு வழியில்லாமல் செய்து விட்டார்கள்.
7வது ஊதியக் குழு
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 7வது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை.  இக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கையான ஏழாவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைக்கப் படவேண்டும் எனவும்,  50% பஞ்சப் படி  01.01.2011  முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப் பட வேண்டும் எனவும்,  GDS ஊழியர்களுக்கும்  ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மை குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், 5 கட்ட பதவி உயர்வு வழங்கப் படவேண்டும், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், வேலை நிறுத்த உரிமை சட்டமாக்கப் பட வேண்டும்,  கருணை அடிப்படையிலான  பணி நியமனங்கள் முழுமை யாக வழங்கப் படவேண்டும் போன்றவை உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம்.
பாராளுமன்றம் நோக்கிய பேரணி!
எதிர்வரும் டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியில் GDS  ஊழியர் கோரிக்கைகளுக்காக பாராளுமன்றம் நோக்கிய பேரணியும், அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் (All Central Trade  Union)மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நமது NFPE சம்மேளனத்தின் மூலம் 10 கோரிக்கைகளுக்காக டிசம்பர் திங்கள் 12 ஆம் தேதி (GDS  பேரணியைத் தொடர்ந்து) பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் நமது கோட்டத்தின் சார்பில் மிக அதிக தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 
தோழமையடன்,
N .ராஜேந்திரன்

செயலர் 

No comments:

Post a Comment