சென்னை : புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், அகலவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவுக்கான தலைவர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், ஊதியக்குழு பரிந்துரை செய்யும் வரை இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பிப்.12, 13 தேதிகளில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாயில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் தேனாம்பேட்டை இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அரங்கத்தில் நேற்று வேலைநிறுத்த ஆதரவு கூட்டம் நடந்தது.சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் M.துரைபாண்டியன், தலைவர் J.ராமமூர்த்தி ஆகியோர் கூட்டு தலைமை வகித்து பேசினர். கூட்டத்தில் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் M.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பலரும் வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் பிப்.12, 13ம் தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெறும். வேலை நிறுத்தத்திற்கு மேலும் பல தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன என்றனர்.
நன்றி:தினகரன்
No comments:
Post a Comment