AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday, 3 February 2014

JCA
NFPE – FNPO
தென் சென்னை கோட்டம்

அன்பார்ந்த  தோழர்களே! தோழியர்களே!

பிப்ரவரி 12 & 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்!வெற்றிகரமாக்குவோம்!

NFPE, FNPO சம்மேளனங்கள் சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்
வெற்றி பெற செய்வோம் !
  
இன்றில்லையேல்  என்றும் இல்லை !
களம் இறங்கிப் போராடுவோம் !
போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !

ஏழாவது ஊதியக் குழு அமைத்தல், அகலவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல், GDS ஊழியர்களை ஊதியக்குழு வரம்புக்குள் நிச்சயம் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பிப்.12,13 தேதிகளில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்காக 7வது ஊதியக்குழுவை அமைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர்கள் தரப்பு, அரசுக்கு இறுதி செய்து அறிக்கை தந்தது. 
ஆனால், அரசு சம்பளக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த 10ம் தேதி மகா சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு டெல்லியில் கூடியது. அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12,13ம் தேதிகளில் 48 மணி நேரம் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். 

அதற்காக அஞ்சல் துறையின் முக்கியத் தொழிற்சங்கங்களான NFPE, FNPO ஆகியவை வேலை நிறுத்த அறிவிக்கையை புதுடெல்லியில் உள்ள அஞ்சல்துறை செயலாளரிடம் வழங்கியுள்ளனர். கடந்த 17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி, கடந்த 25.01.2014 அன்று திருச்சி, மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

 20.01.2014 அன்று கிண்டி அஞ்சலகத்தில் கூடிய தென் சென்னை JCA வில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில், 8.2.14 மற்றும் 10.2.14 ஆகிய தினங்களில் வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து அஞ்சலகங்களிலும் அனைத்து ஊழியர்களை சந்திப்பது எனவும் தேவைப்பட்டால் முக்கிய அஞ்சலகங்களில் விளக்க கூட்டங்களை நடத்துவது எனவும்
07.02.2014  -  கோட்ட அலுவலகம்
08.02.2014  -  அசோக்நகர் அஞ்சலகம்
10.02.2014  -  அடையார் அஞ்சலகம்
11.02.2014  -  புனித தாமஸ்மலை தலைமை அஞ்சலகம்
முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம நடைப்பெறும்.      
இந்தப் வேலைநிறுத்த போராட்டத்தை ஒற்றுமையாக, வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் முக்கிய கடமை ஆகும்.
                                      
  • ·         50% சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
  • ·         இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம்!
  • ·         GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் நிச்சயம் கொண்டு வருவோம்!
  • ·         GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம்!
  • ·         5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம்!
  • ·         1.1.2004 க்குப் பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே           நிச்சயம் பெறுவோம்!
  • ·         5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம்!
  •    ·    மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற,பணம் செலுத்தாத                       நேரடி மருத்துவம் பெறுவோம்!
  •         அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம்! தேவைக் கேற்ற      புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம்!
  •      பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை                    அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம்!
  • ·         ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது           ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம்!
  • ·         வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம்!
  • ·         நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம்!
  • ·         OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம்!
  • ·         தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை                                   தடுத்து நிறுத்திடுவோம்

இவையெல்லாம் வென்றெடுக்க ஒன்று பட்டு போராடினால் மட்டுமே முடியும், தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் அறிவித்திட இயலாது என்பது நமக்கு தெரியும். 

அதற்கு மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது, அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் நாமும் கிளர்ந்தெழுவோம் தோழர்களே! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுவோம்! இது நம்மால் முடியும்! இது நம் கைகளில் தான் இருக்கிறது! இன்றில்லையேல்  என்றுமே இல்லை! தேர்தல் வந்து விட்டால் எதுவுமே இல்லை!

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் !
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் !
இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிடுவோம் !

போராட்ட வாழ்த்துக்களுடன்,
                  NFPE                                                       FNPO
           N.ராஜேந்திரன்  P3                                 K.சுல்தான் முகைதீன் P3 
           S.ரவிச்சந்திரன் p4                                  S.மணவாளன் P4
           S.அங்கமுத்து GDS                                 P.ராஜேந்திரன் GDS                                                 


No comments:

Post a Comment