AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday 28 June 2013

30.06.2013 அன்று அரசுப் பணி நிறைவு பெறும் அன்புத் தலைவர்கள் !

30.06.2013 அன்று அரசுப்  பணி  நிறைவு பெறும்

 அன்புத் தலைவர்கள் !


தமிழக அஞ்சல் மூன்று இயக்கத்தின் சிந்தனைக்  கருவூலம் !
சிதறாத தொழிற்ச்சங்க இயக்க சிற்பி !
தலைமுறை கண்ட பல தலைவர்களின் அருகாமை இருந்தும் 
எவரிடமும் பதவி வேண்டாத பண்பாளர் !
நீவிர் வாழிய பல்லாண்டு !
அன்புத்  தோழர் G . மனோகரன் , AAO  (EX- APM  A /Cs  ANNA ROAD  HPO )
அலை பேசி எண் : 09480809743
அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர் வாள் !
அஞ்சாத நெஞ்சினன் !
ஆனாலும் கள்ளமில்லா சிரிப்பினன் !
தலைமைப் பண்பின் சிகரம் !
வாழிய நீ பல்லாண்டு !
அன்புத் தோழர் . சுந்தரதாஸ் , APM (DELIVERY ), T .NAGAR  HPO 
மத்திய சென்னை கோட்ட அஞ்சல் மூன்றின்  முன்னாள் தலைவர் 
முன்னாள் TNCPCB  இயக்குனர் 
அலைபேசி எண் :09500156316

Friday 7 June 2013

36வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல்

Flower Pictures, Scraps, Images and Commentsதென் சென்னை போன்று --
36 வது  தமிழ் மாநில மாநாடு    --
மாநில செயலரின்  சிறப்பான பாரபட்சமற்ற செயல்பாட்டால்  -- கடந்தகால கசப்பை மறந்து  -- ஒற்றுமை மாநாடாக நடைப்பெற்றது  என்றால் மிகையாகாது .

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!

Flower Pictures, Scraps, Images and Commentsஇனி ஒற்றுமை  ஓங்கட்டும்!
            ஊழியர்கள்  பிரச்சினை  நீங்கட்டும்! 
                         பழைய காலங்கள்  போல் -- 
                                 அஞ்சல் மூன்றின்  பெருமை  சிறக்கட்டும்!   The 36th All India Postal Employees Union Group “C” Circle conference of our union was held from 05.06.2013 to 08.06.2013 at Sree Kanchi sankara Mahal, Kumbakonam  

The following office bearers were elected unanimously for the ensuing term

President                      : Com. J. Srivenkatesh, Chennai city North Dn

Vice Presidents            : Com. V.Venkataraman, Chennai city South Dn
                                      : Com. D. Ebenezer Gandhi, Coimbatore Dn
                                      : Com. J. Janakiraman, Trichy Dn

Secretary                      : Com. J. Ramamurthy, Chennai city Central Dn

Asst. Secretary            : Com. R. Kumar, Pudukotai Dn
                                      : Com. S. Veeran, Vellore Dn
                                      : Com. R.V.Thiagarajapandian, Ambasamudram Br.
                                                                  : Com. C. Sanjeevi, Salem West Dn
                                      : Com. S.K. Jacob Raj, Tirunelveli Dn

Finance Secretary        : Com. A. Veeramani, Anna Road Branch

Asst. Fin Secretary      : Com. R. Perumal, Kumbakonam Dn

Organising Secretary         : Com. G. Ramamurthy, Chengalpattu Dn
                                      : Com. V. Jothi, Dindugul Dn
                                      : Com. A. Rajendran II, Tirupur Dn

Flower Pictures, Scraps, Images and Comments மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மண்ணின் மனத்தோடு அனைவரையும்  சிறப்பாக  வரவேற்று  உபசரித்த  குடந்தை கோட்டத்தின் வரவேற்பு குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 

-- N .இராஜேந்திரன் 
             செயலர் 

Monday 3 June 2013

HEARTY WELCOME TO 36TH CIRCLE CONFERENCE OF AIPEU GR. C, TN CIRCLEஅன்பிற்கினிய எமதருமைத் தோழர்களுக்கு இனிய வணக்கங்கள் !

அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு !  36 வது மாநாடு ! இது ஒரு ஒற்றுமை மாநாடாக மலரட்டும் ! உங்கள் அனைவரின் மனம் திறந்த ஒத்துழைப்போடு ! கடந்த காலத்தின் கசப்புகள் மறைந்தே போயின !  எதிர்காலம் ஒற்றுமை ! மேலும் ஒற்றுமை ! ஆம் ! இது காலத்தின் கட்டாயம் !

முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகள் , உலகமயம் என்ற பெயரில் , தாராளமயம் என்ற பெயரில், வணிக மயம் என்ற பெயரில்  அடித்தட்டு மக்களுக்கு  எதிராக , உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்திருப்பது கண்கூடு !  தபால் துறை ஏதோ தனித்தீவு அல்ல ! இன்சுரன்சு துறை போல , வங்கித்துறை போல, பொதுத் துறை போல , சில்லறை வர்த்தகம் போல, விவசாயம் போல எங்கும் எதிலும் தனியார் மய ஆதிக்கம் ! அதற்கு நடைபாவாடை விரிக்கும் மத்திய  அரசு ! BSNL ஐக் 'கபளீகரம்' செய்தது போல நம்மையும் 'கபளீகரம்' செய்யக் காத்திருக்கும் பன்னாட்டுநிறுவனங்கள்! 

இந்த முதலாளித்துவ சக்திகள் கொடுத்த பலத்தால், அரசு கொடுத்த தைரியத்தால் , அடக்கி ஆள  நினைக்கும் அதிகார வர்க்கம் ! இதனை எதிர்க்க உலகத் தொழிலாளர்கள் மட்டும் ஒன்றுபடுங்கள் என்று  நாம் குரல் கொடுத்தால் போதாது ! நம்மிடமும் ஒற்றுமை வேண்டும் ! அந்த திசை நோக்கி தீர்மானிக்கும் மாநாடாக இது மலரட்டும்! எதிர்காலத்தின் போராட்டங்களுக்கு இது விதை களமாகட்டும் ! 

அந்த திசை நோக்கி உங்கள் அனைவரையும் வருக ! வருக! என இருகரம் நீட்டி வரவேற்கிறோம் நாங்கள் ! மாநாட்டு நிகழ்வுகளை நான்கு நாட்களும் பொறுப்பெடுத்து நடத்துகிற குடந்தை கோட்டத்தின் வரவேற்புக் குழு , தஞ்சை மாவட்டத்திற்கே உரிய  மண்ணின் மனத்தோடு  உங்களை வரவேற்க காத்திருக்கிறது !  தாராள குணத்தோடு முன்னடி வைத்து வாசலில்  வரவேற்க காத்திருக்கிறது.! அவர்களும் நம் தோழர்களே ! அவர்களுக்கு நீங்களும் உதவிக் கரம் நீட்டிட நாங்கள் வேண்டுகிறோம் ! ஆம் ! 

நன்கொடை  முடிந்த மட்டும் உதவுங்கள் !  முடியாதவர்கள் மீதமுள்ள நன்கொடை ரசீது புத்தகங்களை சரியான கணக்கோடு திருப்ப ஒப்படையுங்கள் ! இது முதல் வேண்டுகோள் !

இரண்டாவது வேண்டுகோள் !  சார்பாளர்  மற்றும் பார்வையாளர் கட்டணம்  ரூ . 750/- என நிர்ணயிக்கப் பட்டுள்ளது . GDS  தோழர்களுக்கு ரூ.600/-. அந்தப் பணத்தில் ரூ. 400/- பெறக்கூடிய  ஒரு தரமான SHOULDER  BAG , FILE  COVER , பேனா , NOTE  PAD  என மொத்த கொள்முதலில் ரூ. 300/- பெறுமானத்திற்கு உங்களுக்கு மாநாட்டு நினைவாக வழங்கப் பட உள்ளது. மீதமுள்ள ரூ.450/- இல்(GDS ரூ.300/-இல்)  தான் மாநாட்டு நாட்களில் தரமான , காலை, மதியம் ,இரவு உணவு , அதிகாலை காபி, 11.00 ,மணியளவில் தேனீர்,  மாலை 4.00 மணியளவில் ,  தேநீர்  மற்றும் சிறு உணவு  உள்ளிட்டவை வழங்கப் படவுள்ளன !.  இது இந்தக் கால விலைவாசியில் நிச்சயம் முடியாது என்பது உங்களுக்குதெரிந்திருக்கும் !  

எனவே  மாநாட்டு நிகழ்வுக்கு வரக்கூடிய அனைத்து தோழர்களும்  தயக்கமின்றி , சுணக்கமின்றி  சார்பாளர் / பார்வையாளர் கட்டணத்தை கட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம். கோட்ட/கிளைச் செயலர்கள் /மாநிலச் சங்க நிர்வாகிகள்  தயவு செய்து இந்த விஷயத்தில் கவனம் செலுத்திட வேண்டுகிறோம். முதல் நாள் காலை சிற்றுண்டி தவிர  இதர உணவுக்கு கண்டிப்பாக  உணவுக் கூப்பன் இல்லையென்றால் எவரையும் அனுமதிக்க இயலாது என்று உங்களுக்கு தெரியும்.

"எக்ஸ்ட்ரா கூப்பன் கொடுங்கள்""எக்ஸ்ட்ரா BAG  கொடுங்கள் " என்று எந்தத் தலைவர்களையோ , மாநிலச் சங்க நிர்வாகிகளையோ , வரவேற்புக் குழு  பொறுப்பாளர் களையோ தயவு செய்து எந்தத் தோழரும் நட்பு அடிப்படையில்  INFLUENCE  செய்து அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திட வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்.  இப்படி ஒவ்வொரு நிர்வாகியும் செய்யப் போனால் என்ன ஆகும் என்று  உங்கள் சிந்தனைக்கே  விடுகிறோம் அதனால் தான் இந்த வேண்டுகோளை  நாங்கள்   விடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் !  தவறாக எண்ணாதீர்கள் !

இது உங்கள் மாநாடு . உங்கள் ஒத்துழைப்பு  இருந்தால் மட்டுமே  சிறப்பாக , ,மகிழ்ச்சியாக மாநாட்டை  நாம் நடத்திட முடியும் ! அந்த திசை நோக்கி சிந்திக்க வேண்டுகிறோம் ! உங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு என்று எங்களுக்கு தெரியும் ! அதற்கு  முன்னோட்டமாகவே எங்கள் இதய பூர்வமான  நன்றியினை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.!

என்ன தோழர்களே ! மாநாட்டில் சந்திக்கலாமா ? 

தோழமையுடன் 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று   சங்கத்திற்காக 
அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள் .