Wednesday 27 April 2016
Wednesday 13 April 2016
Monday 11 April 2016
LSG PROMOTIONS VI LIST RELEASED IN TAMILNADU CIRCLE WITHIN FIVE MONTHS - CONGRATS TO ALL PROMOTED OFFICIALS - THANKS TO OUR CHIEF PMG, TN AND CIRCLE ADMINISTRATION
SUCCESS TO THE CONTINUED EFFORTS OF OUR
CIRCLE UNION !
நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு வெற்றி ! கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து FOUR MONTHLY MEETING , RJCM MEETING , JCM DEPARTMENTAL COUNCIL MEETING மற்றும் தமிழகத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டங்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் நம்முடைய கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது கண்கூடு.
அதில் முக்கியமானது - காலியிடங்களை முழுமையாக நிரப்புவதும் , LSG HSG II, HSG I, PM GRADE II, III , பதவி உயர்வுகளை அளிக்க வேண்டுவதும் ஆகும். இதில் எல்லா நிலைகளிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது பெருமையுடன் பகிர்ந்துகொள்ளவேண்டியதாகும்.
இதற்கான முழு முயற்சிகளையும் எடுத்து, பதவி உயர்வுகளை அளித்த நம்முடைய CHIEF PMG அவர்களுக்கும் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கும் நம் நன்றி உரித்தாகட்டும் ! இதுவரை கடந்த 5 மாதங்க ளுக்குள் 6 LSG பதவி உயர்வுப் பட்டியல் அஞ்சல் பகுதியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. (RMS பகுதிக்கு தனியே வெளியிடப் பட்டுள்ளது ) .
இதில் பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 525. LSG பதவிகளை நிரப்புவதன் மூலம் ஏற்படும் எழுத்தர் காலியிடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு காலியிடங்களாக அறிவிக்கப் படும். அதன் மீது எழுத்தர் தேர்வு நடைபெறும். நிச்சயம் ஆட்பற்றாக்குறை என்பது பெருமளவு இதனால் தீர்க்கப்படும். மேலும் நம்முடைய RJCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியும், நம்முடைய டிசம்பர் 1, 2 - 2015 இல் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக இலாக்காவிடம் பெற்றஒப்பந்தம்காரணமாகவும் அனைத்து காலியிடங்களையும் நிரப்பிட புள்ளிவிபரங்கள் கோட்டங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது காலியிடங்கள் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பதவி உயர்வு பெறும் அனைத்து தோழர்கள்/ தோழியர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சுநிறை வாழ்த்துக்கள். கீழே பார்க்க பதவி உயர்வுப் பட்டியலை.
Posted
Thursday 7 April 2016
Wednesday 6 April 2016
Subscribe to:
Posts (Atom)