AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday 30 May 2013

தோழர்களே!   
                            
                           நமது கோட்ட சங்கத்தின் 27வது ஆண்டு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் குறித்த கடிதத்தை முதுநிலை கண்காணிப்பாளரிடம் 29.05.2013அன்று கொடுக்கப்பட்டது. கோட்ட செயலர் தோழர் N.இராஜேந்திரன் அவர்களுடன் தோழர்கள் V.வெங்கட்ராமன் (மாநிலதுணைதலைவர்), நிதி செயலர் G.ரவி, துணை தலைவர் R.கனகவேல், உதவி செயலர் K.கந்தசுப்ரமனியன், அமைப்பு செயலர் A.சர்புதீன் மற்றும் G.அருண்பிரகாஷ் உடன் இருந்தனர்.  பல முக்கிய கோட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தோழர் குமார் திருவான்மியூர் Treasurerஆக order போடப்பட்டும் நீண்ட காலமாக அவரை ஈஞ்சம்பாக்கதில் இருந்து விடுவிக்காமல் (மாற்றாமல்) கிடப்ப்பில் போடப்பட்டுள்ளதற்கான தடைகளை யார்? ஏற்படுத்துகிறார்கள் என்பதனை விளக்கமாக  எடுத்துரைத்த பின் இன்று தோழர் குமார் அவர்கள் திருவான்மியூர் Treasurerஆக  charge 29.05.2013 அன்று எடுத்துள்ளார். ஆகவே SSPஅவர்களுக்கு கோட்ட சங்கத்தின்  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மாநில சங்க மாநாட்டிற்கு வரும் தோழர்கள் செயலரிடம் பெயரை பதிவு செய்ய வேண்டுகிறேன்

- N .இராஜேந்திரன்
              செயலர்

Saturday 25 May 2013

The 27th Divisional Conference office bearers list


                           The 27th  Divisional Conference of All India Postal Employees Union Group "C", Chennai city south division held on 24.05.2013 at 18.00 hrs at St.Thomas mount HO  Chennai 600016 under the president ship of Com. V.Venkataraman, Adhoc Convener & Circle Vice President in the presence of Circle Secretary Com. J.Ramamurthy and Circle President Com. J.Srivenkatesh.  Our Circle Secretary Com. J.Ramamurthy delivered his speech covering all the issues (including minus balance).   Our Circle President Com. J.Srivenkatesh, Vellore Divisional Secretary Com. S.Veeran, Chennai GPO Secretary/President Com. K.Murali, Com. Nombu Raj, Chennai North Dn Asst. Secretary Com. K.S.Soundarapandian, Chennai city south Dn P4 Secretary Com. Ravichandran, Ex.Circle Adhoc Member Com. G.Manoharan and Ex.President Chennai city south division Com. V.Venkatarangan addressed and greeted the conference and newly elected office bearers with their valuable speech.  The following office bearers were elected unanimously.

List of office bearers 

President                         -    Com. N.Vasudevan, SPM, Guindy PO

Vice Presidents               -    Com. R. Kanagavel, SPM, Thiruvanmiyur PO
                                              Com. G. Loganathan, SPM, A.T.Nagar PO
                                              Com. C. Chakrapani, PA, Adambakkam PO
                                              Com. T. Ravikumar, Sys.Admin, Velacheri PO

Secretary                        -    Com. N. Rajendran, PA, St.Thomas mount HO

Asst. Secretaries            -    Com. K. Kandasubramanian, SPM, Perungudi PO
                                              Com. P. Krishnakumar, PA, Guindy PO
                                              Com. R. Rex Pinto, PA, Adambakkam PO
                                              Com. R. Lingadurai, Sys.Admin,  St.Thomas mount HO

Financial Secretary        -     Com. G. Ravi, SPM, Air Port PO

Asst. Fin. Secretary       -     Com. G. Junio Gladius, PA, Adayar PO 

Org. Secretaries            -     Com. M. P. Saibaba, PA, Guindy PO

                                              Com. A. Sharfuiddin, PRI(P), Thiruvanmiyur PO
                                              Com. G.Simon, Sys.Admin. Nanganallur PO

Auditor                          -      Com. N. Gurushankaran  PA,  St.Thomas mount HO    


             

Monday 20 May 2013

அகில  இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு 
தென் சென்னை கோட்டம் 
சென்னை 600035


27வது கோட்ட மாநாடு அழைப்பிதழ் 

தோழர்களே! தோழியர்களே!

நமது தென் சென்னை கோட்ட மாநாடு வரும் 24.05.2013 வெள்ளி கிழமை மாலை 6.00 மணியளவில் St.Thomas mount HO நடைபெற உள்ளது.  அனைவரும் பங்கேற்று மாநாட்டினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
V .வெங்கட்ராமன்
  convener
நிகழ்ச்சி  நிரல் 

நாள் : 24.05.2013 வெள்ளி கிழமை 
நேரம் :மாலை 6.00 மணி
இடம்: St.Thomas mount HO 

தலைமை:தோழர். V .வெங்கட்ராமன்,  convener & மாநில துணைத் தலைவர் 

வரவேற்புரை :தோழர்.K .கந்தசுப்ரமணியன் Adhoc Member 

நிர்வாகிகள் தேர்வு 
மாநில மற்றும் மத்திய சங்க சார்பாளர்கள் தேர்வு 

வாழ்த்துரை/சிறப்புரை 

தோழர்.K .V .ஸ்ரீதரன் முன்னால் பொது செயலர் 

தோழர்.J .இராமமூர்த்தி மாநில செயலர்

தோழர்.J.ஸ்ரீவெங்கடேஷ்  மாநில தலைவர்

நன்றியுரை :தோழர். N .இராஜேந்திரன்  


தோழர்களே! தோழியர்களே!


                                                 08.05.2013   அன்று நமது கோட்ட செயற்குழு (Adhoc committee) கூட்டம தோழர். N.வாசுதேவன்   அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது.  செயற்குழு கூட்டத்தில் தோழர்கள் R.கனகவேல்,   N.ராஜேந்திரன்,  C.கருணாகரன் R.லிங்கதுரை B.சுரேஷ் பாபு , P.கிருஷ்ணகுமார், N.குருசங்கர், M.P.சாய்பாபா, R.ரெக்ஸ் பின்டோ, V.வீரமணிகண்டன், C.சக்கரபாணி, C.ராபர்ட், A.சர்புதீன், G.J.கிளாடியஸ். S.சதீஷ், G.லோகநாதன், G.பொன்னுசாமி, D. பூபால கிருஷ்ணன், G.அருண் பிரகாஷ், தனபால்   மற்றும்  Adhoc committee members V.வெங்கட்ராமன், N.வாசுதேவன், K.கந்த சுப்பிரமணியன், G.ரவி அகியோர்  கலந்துகொண்டுடனர்.

              கோட்டத்தின் தற்போதைய நிலையை நன்கு ஆராய்ந்து கோட்டத்தில் minus balance recoveryயால்  நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும்கடந்த சில மாதங்களுக்கு  முன்  ஏற்பட்ட  கசப்பான   நிகழ்வுகளால்  சங்கத்தின் வளர்ச்சியில்  சிறு தொய்வு மற்றும்  மாற்று சங்கங்களின் வளர்ச்சிஅதிகாரிகளின் அத்துமீறல்கள், காலம் நேரம்  இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வலிமையான கோட்டச்சங்கத்தை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளதை ஆராந்து நமது சங்கத்தின்  கோட்ட  மாநாடு வருகின்ற 24.05.2013  அன்று மாலை 6.00 மணியளவில் St.Thomas mount HO வில் நடத்துவது எனவும்  கோட்ட சங்க நிர்வாகிகளை கருத்து  ஒற்றுமையுடனும், ஒருமனதுடனும் ஒற்றுமைமாநாடக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.  முக்கிய  கால கட்டத்தில்  CBI யின்  நடவடிக்கைக்கு  உட்பட்டும்  தனது  தொழிற்ச்சங்க  பணியை  தொய்வின்றி  சிறப்பாக  இன்றுவரை  ஆற்றிவரும்   
தோழர். N . வாசுதேவன் அவர்களை 
தலைவராகவும்
தோழர். N. ராஜேந்திரன் அவர்களை 
செயலராகவும்,
தோழர். G .ரவி அவர்களை 
பொருளாளராகவும்

முன்நிறுத்தி கோட்ட சங்க மாநாட்டில் தேர்ந்தெடுப்பது என ஒரு மனதாக  முடிவெடுக்கப்பட்டது. 

                           ஜூன் 5, 6 மற்றும் 7 தேதிகளில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தேர்தெடுக்கப்படும் சார்பாளர்கள் கலந்து கொண்டு நமது கோட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது  எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுழல் மாற்றல்(RT) மற்றும் interest of service transferல் உள்ள அநீதி களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடுவு எடுக்கப்பட்டது.  நமது கோட்டத்தின் சார்பாக பெருவாரியான சார்பாளர்கள்  மாநில மாநாட்டில்  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மாநில சங்க  வேண்டுகோளின் படி  மாநில  மாநாட்டை   சிறப்பாக  நடத்திட உறுப்பினர்கள்  அனைவரும் ரூ.200/- நன்கொடை அளிக்க வேண்டுகிறோம். 
                         
              நமது சங்கத்தின்  வலைதளம்  http://p3chsouth.blogspot.in/  & email p3chsouth@gmain.com  பயன்படுத்தி செய்திகளை தெரிந்தது கொள்ளவதோடு  புகார்களை பதிவு செய்து பயன்பெற  வேண்டுகிறோம்.

 V.வெங்கட்ராமன் 
Convener

Sunday 12 May 2013

நமது கோட்ட union  மாதந்திர பேட்டி 23.05.2013 அன்று நடைபெற உள்ளதால் அந்தந்த அலுவலகத்தில் உள்ள குறைகளை 16.05.2013 ல் p3chsouth@gmail.com என்ற e-mail க்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

DPS... Tranfers and Postings.......


1.  Shri.A.Govindarajan, 2000, DPS HQ, Kerala Circle, Trivandrum posted as DPS HQ, Tamilnadu Circle, Chennai
2. Shri.J.T.Venkateswaralu, 1994, DPS HQ, TN Circle, Chennai posted as DPS, CCR, TN Circle..
3. Shri.V.S.Jayasankar, DPS, Southern Region, Madurai posted as DPS, Western Region, Coimbatore.
4. Shri.Parimal Sinha, 2001, Director (Mails & SP), Tamilnadu Circle, Chennai posted as DPS HQ, Bihar Circle, Patna.

Monday 6 May 2013

OUR HEARTIEST CONGRATS TO OUR BELOVED LEADER COM. M. KRISHNAN


' THE MIGHTY WARRIOR ' 

HAS GOT THE HIGHEST JOB

' THIS IS THE FIRST TIME IN HISTORY SINCE THE FORMATION OF CONFEDERATION '

OUR HEARTIEST CONGRATS TO OUR

BELOVED LEADER COM. M. KRISHNAN


கடந்த  04.05.2013  முதல்   06.05.2013  வரை  கொல்கத்தா மாநகரில்  நடைபெற்ற மத்திய  அரசு  ஊழியர்  மகா  சம்மேளனத்தின்  24 ஆவது  தேசிய  மாநாட்டில் நம்முடைய   அஞ்சல்   மூன்றின்   பொதுச்   செயலரும்,  NFPE  சம்மேளனத்தின் மாபொதுச்       செயலரும்    ஆகிய   தொழிற்  சங்கப்   போராளி  தோழர் .  M . கிருஷ்ணன்    அவர்கள்   மத்திய   அரசு    ஊழியர்    மகா  சம்மேளனத்தின் பொதுச்    செயலராகவும்        தேர் ந்தெடுக்கப் பட்டார்   என்பதை மகிழ்ச்சியுடன்   தெரிவித்துக்  கொள்கிறோம் . 

1966 இல் துவங்கப்பட்ட மகா சம்மேளன அமைப்பிற்கு நமது NFPTE/NFPE   பேரியக்கத்திலிருந்தும் அரசு துறையில் பணியில் (Service) உள்ள  மாபொதுச்  செயலர் பொறுப்பு பெறுவது இதுவே முதல் முறை . தொழிற் சங்க வரலாற்றில் இது ஒரு மைல் கல்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் என்பது மத்திய அரசுத் துறையில் இயங்கி வரும் 106 சங்கங்களை உள்ளடக்கியது. 13 லட்சம்  ஊழியர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் .

தோழர் கிருஷ்ணன் தலைமையில் 7ஆவது ஊதியக் குழு , 50% பஞ்சப்  படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 5 கட்ட பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிச்சயம் வென்ற டைவோம் என்பது உறுதி . இந்த நிகழ்வு  NFPE  பேரியக்க வரலாற்றில் நிச்சயம் பதிக்கப் படும் .

தென் சென்னை  அஞ்சல் மூன்று சங்கம்  வரலாற்று முத்திரை பதிக்க  தோழர் .  M .கிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறது ! 

-- V.Venkataraman
         Convener

Thursday 2 May 2013


மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கதுஇங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
ரஷ்யாவில் மே தினம்
முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு  இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள்  நடைபெற்றன.  1896  ஏப்ரல்  மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.