AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday 20 May 2013

தோழர்களே! தோழியர்களே!


                                                 08.05.2013   அன்று நமது கோட்ட செயற்குழு (Adhoc committee) கூட்டம தோழர். N.வாசுதேவன்   அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது.  செயற்குழு கூட்டத்தில் தோழர்கள் R.கனகவேல்,   N.ராஜேந்திரன்,  C.கருணாகரன் R.லிங்கதுரை B.சுரேஷ் பாபு , P.கிருஷ்ணகுமார், N.குருசங்கர், M.P.சாய்பாபா, R.ரெக்ஸ் பின்டோ, V.வீரமணிகண்டன், C.சக்கரபாணி, C.ராபர்ட், A.சர்புதீன், G.J.கிளாடியஸ். S.சதீஷ், G.லோகநாதன், G.பொன்னுசாமி, D. பூபால கிருஷ்ணன், G.அருண் பிரகாஷ், தனபால்   மற்றும்  Adhoc committee members V.வெங்கட்ராமன், N.வாசுதேவன், K.கந்த சுப்பிரமணியன், G.ரவி அகியோர்  கலந்துகொண்டுடனர்.

              கோட்டத்தின் தற்போதைய நிலையை நன்கு ஆராய்ந்து கோட்டத்தில் minus balance recoveryயால்  நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும்கடந்த சில மாதங்களுக்கு  முன்  ஏற்பட்ட  கசப்பான   நிகழ்வுகளால்  சங்கத்தின் வளர்ச்சியில்  சிறு தொய்வு மற்றும்  மாற்று சங்கங்களின் வளர்ச்சிஅதிகாரிகளின் அத்துமீறல்கள், காலம் நேரம்  இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வலிமையான கோட்டச்சங்கத்தை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளதை ஆராந்து நமது சங்கத்தின்  கோட்ட  மாநாடு வருகின்ற 24.05.2013  அன்று மாலை 6.00 மணியளவில் St.Thomas mount HO வில் நடத்துவது எனவும்  கோட்ட சங்க நிர்வாகிகளை கருத்து  ஒற்றுமையுடனும், ஒருமனதுடனும் ஒற்றுமைமாநாடக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.  முக்கிய  கால கட்டத்தில்  CBI யின்  நடவடிக்கைக்கு  உட்பட்டும்  தனது  தொழிற்ச்சங்க  பணியை  தொய்வின்றி  சிறப்பாக  இன்றுவரை  ஆற்றிவரும்   
தோழர். N . வாசுதேவன் அவர்களை 
தலைவராகவும்
தோழர். N. ராஜேந்திரன் அவர்களை 
செயலராகவும்,
தோழர். G .ரவி அவர்களை 
பொருளாளராகவும்

முன்நிறுத்தி கோட்ட சங்க மாநாட்டில் தேர்ந்தெடுப்பது என ஒரு மனதாக  முடிவெடுக்கப்பட்டது. 

                           ஜூன் 5, 6 மற்றும் 7 தேதிகளில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தேர்தெடுக்கப்படும் சார்பாளர்கள் கலந்து கொண்டு நமது கோட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது  எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுழல் மாற்றல்(RT) மற்றும் interest of service transferல் உள்ள அநீதி களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடுவு எடுக்கப்பட்டது.  நமது கோட்டத்தின் சார்பாக பெருவாரியான சார்பாளர்கள்  மாநில மாநாட்டில்  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மாநில சங்க  வேண்டுகோளின் படி  மாநில  மாநாட்டை   சிறப்பாக  நடத்திட உறுப்பினர்கள்  அனைவரும் ரூ.200/- நன்கொடை அளிக்க வேண்டுகிறோம். 
                         
              நமது சங்கத்தின்  வலைதளம்  http://p3chsouth.blogspot.in/  & email p3chsouth@gmain.com  பயன்படுத்தி செய்திகளை தெரிந்தது கொள்ளவதோடு  புகார்களை பதிவு செய்து பயன்பெற  வேண்டுகிறோம்.

 V.வெங்கட்ராமன் 
Convener

No comments:

Post a Comment