AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday, 20 February 2015

MO VIDESH SERVICES DISCONTINUED WITH IMMEDIATE EFFECT


EXEMPTION FROM PHYSICAL APPEARANCE FOR LIFE CERTIFICATES

ENCASHMENT OF EARNED LEAVE ON LTC - CLARIFICATION FROM DOPT

MACPs to CG Employees on time -- DSCs will decide in advance- Reiterated instructions


CIRCLE UNION ADDRESSED CPMG, TN FOR DRAWAL OF PAY AND ALLOWANCES BY 24.02.2015


நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகளும் ஆட்பற்றாக்குறையும் அஞ்சல் ஊழியர் போராட்டமும்

A REVIEW ON RELEASING OF PA DR EXAMINATION RESULTS IN TN CIRCLE


ஒரு வழியாக  தமிழக அஞ்சல் வட்டத்தில் நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களை விட ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு  இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்  இது  கிட்டத்தட்ட 50% ஆட்பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க  வழி ஏற்படுத்தியுள்ளது. ஒரு வகையில் இது  தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின்  மூன்று கட்ட போராட்டத்திற்கு  கிடைத்த  முதல் வெற்றியே  !  1 1/2 மாதங்கள் கிடப்பில் கிடந்த  தேர்வு முடிவுகள் , நம்முடைய  தமிழகம் தழுவிய போராட்ட  உந்துதலால் , ADDL  CHARGE  ஆக  வந்த  கர்நாடகா  CPMG  யின் கவனத்தை ஈர்த்து  உடன் தேர்வு முடிவுகள்  நம்முடைய மாநிலம் தழுவிய முதற்கட்ட போராட்டத்திற்கு அடுத்த நாளே  வெளியிடப்பட்டுள்ளது  நிச்சயம் நமக்குக் கிடைத்த வெற்றியே  !

 2010 க்குப் பிறகு  2014 ஆம் ஆண்டுதான் மிக அதிக அளவில் ஆளெடுப்பு நடைபெற்றுள்ளது. 2010இல் 1640 காலியிடங்கள் நிரப்பப்பட்டன.  2014 இல் நேரடி தேர்வில் மட்டும் 1306 காலியிடங்கள்  நிரப்பிட RESULT  வெளியிடப் பட்டுள்ளது.

நம்முடைய  சங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக 2014 டிசம்பர் 31 வரையான  ANTICIPATED  VACANCY  யும் கணக்கில் எடுக்கப்பட்டு  இந்த  தேர்வுக்கான அறிவிப்பு  கடந்த வருடம் FEBRUARY மாதத்திலேயே செய்யப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய  அம்சமாகும்.   தற்போது 1306 நேரடி  தேர்வு காலியிடங்களில் 864 காலியிடங்கள் அஞ்சல் பகுதி எழுத்தருக்கு  மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இது அறிவிக்கப் பட்ட 641  காலியிடங்களுடன்  RESIDUAL  காலியிடங்களும் , கடந்த ஆண்டில் நேரடி எழுத்தரில் நிரப்பப்படாத காலியிடங்களும் சேர்த்து  அறிவிக்கப் பட்டதாகும். இது நமக்கு கிடைத்த வெற்றியே !

 RMS  SORTER  - 287 மற்றும்   PA CO/RO - 52   PA SBCO  - 73 FGN  POST - 15  MMS - 8 மற்றும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு  RLO  - 7  காலியிடங்கள் நிரப்பிட  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இது தவிர  LGO  விலிருந்து எழுத்தராக நடைபெற்ற  தேர்வுக்கான முடிவுகள் வெளிவர வேண்டும் . அதனை விரைவு படுத்திட நிர்வாகம் உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதில்  280 காலியிடங்கள்  நிரப்பப்பட தேர்வு நடந்துள்ளது. இதில் தேர்வு பெற்று  ஊழியர்கள் வந்தால் அடுத்தது  25% சுமை  குறையும்.

மேலும் LSG  பதவி உயர்வு  இனியும் காலதாமதமின்றி அளித்திடவேண்டி  நாம் போராட்ட அறிவிப்பு செய்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதும்  எதிர்வரும் 27.02.2015 இல்   மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  நாம் வேலை நிறுத்த நோட்டீஸ்  அளிக்க உள்ளோம். 

LSG பதவி   உயர்வு அளிக்கப்பட்டால் , HSG  II , HSG  I  பதவிகள் -  புதிய  HSG  I  RECTT விதிகளின் படி நிரப்பப்பட்டால் , நிச்சயம் மேலும் 450 எழுத்தர் காலியிடங்கள்  இந்த ஆண்டு  சேர்த்து அறிவிக்கப்படும்.  இதில் மீதமுள்ள காலியிடங்கள்  நிரப்பிட  வாய்ப்பு ஏற்படும்.

 எத்தனையோ  GDS  ஊழியர்களின்  வழக்குகளில்  SLP  மேல்முறையீடு  செய்யவேண்டும் என்று  காலத்தையும் ,  இலாக்கா பணத்தையும்  வீணடித்து  டெல்லிக்கு  அதிகாரிகளை அனுப்பும்  மாநில நிர்வாகம் , LSG  பிரச்சினையில்  பலமுறை  கடிதம் எழுதியும்  DTE  இல் இருந்து பதில் வரவில்லை என்று  மூன்று ஆண்டுகளாக சாக்கு போக்கு சொல்வதை  நிறுத்தி,  உடனடியாக  DTE  க்கு ஒரு அதிகாரியை  பதில் பெறுவதற்கென்றே  அனுப்பிட  செய்ய  வேண்டும். அப்படி செய்வார்களா? 

இது ஊழியர்கள் பிரச்சினை ஆயிற்றே? அரசாங்க பணத்தை எப்படி விரயம் செய்ய முடியும் என்று  மாநில நிர்வாகம் நினைக்கிறது போலும் . நிர்வாக காரணங்களுக்கு பதில் பெற வேண்டுமென்றால் உடனே , அந்த நிமிடமே  EMAIL  இல் பதில் அனுப்ப வேண்டும் என்று  நிர்பந்திக்கும் நிர்வாகம் , பதில் அடுத்த நிமிடமே அனுப்பவில்லை என்றால் ' IT WILL BE VIEWED VERY SERIOUSLY'  என்று   MAIL  அனுப்பும் நிர்வாகம் , இந்தப் பிரச்சினையில் மட்டும் ஏன் ஆண்டுக்கணக்கில் இந்த சுணக்கம் காட்டுகிறது  ?  கீழ் மட்ட ஊழியர்கள்தானே என்ற அக்கறையின்மைதான்  காரணம் . "அவர்கள் "  பதவி உயர்வு என்றால்   ஒரே ஆண்டில் பலமுறை கூட  DPC  போடப் படுகிறதே ? 

"நோய் நாடி நோய் முதல் நாடி  அது  தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல் "

 என்கிறது  உலகப் பொதுமறையாம்  திருக்குறள். நோய் தீர்க்குமா நிர்வாகம் ?  போராட்டத்தில் தள்ளுமா நிர்வாகம் ? பொறுத்திருந்து பார்ப்போம் ? 27.02.2015  தேதியை நோக்கி பயணிப்போம். 

ஊழியர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை இந்த  வலைத்தளத்தின் மூலம்  மாநில நிர்வாகத்திற்கு நாம் பதிவு செய்கிறோம். 

முதற்கட்ட போராட்டம் முழு வெற்றி !

TN P 3/NFPE GDS CIRCLE CALL= I PHASE PROGRAMME A GRAND SUCCESS !

முதற்கட்ட போராட்டம்  முழு  வெற்றி !
அடக்குமுறைக்கு அஞ்சிடோம் ! 
ஆணவத்திற்கு அடிபணியோம் !

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  
உங்கள் அனைவருக்கும்   தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் தமிழ் மாநில NFPE  GDS சங்கங்களின்  அன்பு வணக்கங்களும் வீர வாழ்த்துக்களும் .

மாநில அளவிலான அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவினை ஒட்டி,  நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும்,  TARGET  என்ற பெயரில் ஊழியர்கள் மீது  நடத்தப்படும்  கொடும் தாக்குதல்களையும் மற்றும் அதிகார  அத்து  மீறல்களையும்   கண்டித்தும் 40 அம்சக்  கோரிக்கைகளை  வலியுறுத்தி  நேற்றைய தினம் (17.2.2015)  தமிழகம்   தழுவிய  அளவில்  அனைத்து   கோட்ட      மற்றும் கிளைகளில், முதல் கட்ட போராட்டமாக   கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தப் போராட்டம் பரவலாக , சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதாக  தகவல்கள்  வந்து கொண்டிருக்கின்றன  இதுவரை மாநிலச் சங்கத்திற்கு வந்திருக்கும் தகவல்களையும்  கிளைகள் தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்பட நகல்கள் சிலவற்றையும் உங்களின் பார்வைக்கும்  மாநில அஞ்சல் நிர்வாகத்தின் பார்வைக்கும்  நாம் கீழே  அளித்துள்ளோம். 


புகைப்படம்  அனுப்பாமல் , கோவை, திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி, சேலம் கிழக்கு,  ஈரோடு,  நீலகிரி, பொள்ளாச்சி, .உடுமலைபேட்டை,  திருவண் ணாமலை, தாம்பரம் , அம்பத்தூர்  உள்ளிட்ட கோட்ட/ கிளைகளில் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றதாக  மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளிக்காத  கோட்ட/ கிளைச் செயலர்கள்  உடன் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். கிளைகளில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வின் புகைப்படங்களையும் அனுப்புமாறும்  கேட்டுக் கொள்கிறோம். அவையும் மாநில அஞ்சல் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும். மேலும் SAVINGRAM  அனுப்பிடாத கோட்ட/ கிளைச் செயலர்கள்  உடன் அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 நம்முடைய அடுத்த கட்ட  போராட்ட தேதி  அகில இந்திய சங்கத்தின் ஆலோசனையின்  அடிப்படையிலும்  தலைவர்களின்   வழிகாட்டுதல் அடிப்படையிலும் 24.02.2015 க்கு பதிலாக   எதிர்வரும் 27.02.2015 அன்று மத்திய JCA  போராட்டத்துடன் சேர்த்தே நடத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது .  மேலும் மத்திய JCA   அறைகூவலின் படி எதிர்வரும் 20.02.2015 அன்று அறிவிக்கப்பட்டுள்ள  போராட்டத்தினை  சிறப்பாக நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து  இன்று மாலை  நமது வலைத் தளத்தின் மூலமும்   SMS  மூலமும் ஒவ்வொரு கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் மாநிலச்  சங்க நிர்வாகிகளுக்கும்  முறையான தகவல் தெரிவிக்கப்படும் .  மேலும்  விரிவான சுற்றறிக்கையும்  அனுப்பப்படும்.  அந்த அடிப்படையில்  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள்  செயல்பட வேண்டுகிறோம். உங்களின் மேலான ஒத்துழைப்பை  நாடுகிறோம்.

அடுத்த கட்ட போராட்டத்திற்கு  தயார் நிலையில்  இருக்குமாறு வேண்டுகிறோம். போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.  விபரங்கள்  அடுத்த சுற்றிக்கையில் வெளியிடப்படும். முதற்கட்ட போராட்டத்தை சிறப்பாக நடத்திய  அனைத்து பகுதி தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புகைப்படங்கள், பத்திரிகை செய்தி  கீழே பார்க்க :-
சென்னை பெருநகர தென் கோட்டம்
சென்னை பெருநகர   மத்திய  கோட்டம் 

சென்னை அண்ணா சாலை  கிளை 

சென்னை பெருநகர  வட  கோட்டம் 




Wednesday, 18 February 2015

Flash News Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination Result released!

 தமிழக அஞ்சல்  RMS   எழுத்தர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வு  அறிவிக்கப்பட்டு  ஓராண்டு காலத்திற்குப் பின்னர், தேர்வு முடிவுகள் CMC இலிருந்து அனுப்பப் பட்டு  1 1/2 மாதங்கள்  கடந்து  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது . நமது போராட்ட அறிவிப்பில்  இதுவும் ஒரு கோரிக்கை .   தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைப்பை  CLICK  செய்து பார்க்கவும்.
Click here to download

Friday, 6 February 2015

PRESENT POSITION OF OUR DEMANDS VIZ. RELEASING EXAM RESULTS AND RELEASING OF LSG PROMOTIONS

அன்புத் தோழர்களே ! வணக்கம்  !  நேற்று புது டெல்லியில் நடைபெற்ற 40 அம்சக் கோரிக்கைகளின் மீதான, வேலை நிறுத்தம் தொடர்பான  பேச்சு வார்த்தையின்  முக்கிய கோரிக்கைகளின்  மீது தீர்வு ஏற்படாததால்  வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை  தொடரவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக JCA  அறிவித்துள்ளது  . இது குறித்து  நம்முடைய   சம்மேளன  மற்றும் மத்திய சங்க வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இருந்த போதிலும் சில கோரிக்கைகளில் , குறிப்பாக தமிழக அஞ்சல் மூன்று  மூலம்   நம்முடைய  பொதுச் செயலருக்கு பேசிட  கொண்டு செல்லப்பட்ட கோரிக்கைகளில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்முடைய பொதுச் செயலர்  தெரிவித்துள்ளார்.  நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம்  மாநில நிர்வாகத்திடம் இது குறித்து இன்று  தொடர்பு கொண்டு  பேசினோம் . அதன் மீது  தற்போதைய  நிலையை  கீழே  உங்களுக்கு அளிக்கிறோம்.

1. 641 நேரடி எழுத்தர்  மற்றும் 265 LGO  TO P .A .  மற்றும் 254 RESIDUAL  VACANCIES தேர்வு முடிவுகள் :-

தேர்வு முடிவுகள் அனுப்பப் பட்ட 17 அஞ்சல் வட்டங்களில் 16 இல் முடிவுகள்   ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன  தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் RESERVATION  RELAXATION  குறித்து  சில விளக்கங்கள் கேட்டு DIRECTORATE  க்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும்  பதில் வந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து இலாக்கா முதல்வர், தேர்வு முடிவுகளை  உடன் வெளியிட  ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.  

நம்முடைய சங்கத்தின் மூலம்  DTE  இல் இன்று இது குறித்து DDG அளவில் பேசியதில், இன்று மாலையே  உரிய விளக்கம்   CPMG  அவர்களுக்கு அனுப்பப்படும் என்று  உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே  எழுத்தர்  தொடர்பான தேர்வு முடிவுகள்  அனைத்தும்  அடுத்த வாரத்தில்  வெளியாகும் என்று   உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம்  CPMG  அவர்களிடம்   திங்கள் அன்று  இது குறித்து  நிச்சயம் மீண்டும் வலியுறுத்துவோம்.


மேலும் எழுத்தர் நேரடி தேர்வில்  கடந்த  ஆண்டு 40 % பதவிகள்  நிரப்பப் படாமல் போனது  குறித்து  நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து முன்னாள் பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் மூலம்  ஏற்கனவே  DG அளவில்  எடுத்துச் சென்று பேசியதும்  கடிதம் அளித்ததும் உங்களுக்கு  நினைவிருக்கும்.  

அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ,தற்போது  இந்த ஆண்டு  அனைத்து காலியிடங்களும்  விடுபடாமல் நிரப்பப்படும் என்றும் , FIRST  LIST  இல்  எவரும் பணியில் சேரவில்லை என்றால்  SURPLUS  LIST  மூலம் நிரப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் DDG  உறுதியளித் துள்ளார். 


மேலும் அடுத்த ஆண்டு (2015) தேர்வு முறையில்  தாமதம் தவிர்த்திட தேர்வுகள் BATCH  அடிப்படையில் ONLINE  இல்  நடைபெறும் என்றும், ஒவ்வொரு BATCH  களுக்கும் தனித்தனியே  QUESTIONS  அமைக்கப்படும் என்றும்  COMPUTER  ABILITY  TEST  தனியே  நடத்தப்படாமல் சேர்த்தே நடத்தப்படும் என்றும்  இதன் மூலம் காலதாமதம்  தவிர்க்கப்பட்டு, அனைத்து BATCH  தேர்வுகள் முடிந்தவுடன் , ONLINE  என்பதால்  உடனே அந்தந்த  மாநிலங்களுக்கு தேர்வுமுடிவுகள் அனுப்பப்படும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2. LSG  பதவி உயர்வு  தமிழகத்தில் அளிக்கப் படாதது குறித்து :-


ஏற்கனவே நமது CPMG  அலுவலகத்தில் இருந்து, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது பதவிகள்  நிரப்பிடுவது குறித்தும் , DCCS  அல்லது CONFIRMATION  முறையில் எது APPLY  செய்யப் படவேண்டும் என்பது குறித்தும்  DTE க்கு  விளக்கம் கேட்டு பலமுறை எழுதியும் பதில் வரவில்லை என்றும்   தெரிவித்திருந்தார்கள்.  இதுகுறித்து  DG அவர்களி டம் பேசியதில்,  உடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும்  அடுத்த வாரத்தில் உரிய விளக்க ஆணை வழங்கப்படும் என்றும்  உறுதியளிக்கப் பட்டுள்ளது . 

மேலும்  அதற்குரிய SECTION  OFFICER இடம் சென்றும் நம்முடைய பொதுச் செயலர் பேசி உடன் அந்தக் கோப்பினை  உரிய அதிகாரிக்கு அனுப்பிட ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  இது குறித்து நம்முடைய CPMG அலுவலகத்தில் நாம்  தெரிவித்தோம்.  அதற்கு அவர்கள் " LSG  LIST  COMPILE  செய்து  READY  யாக உள்ளதாகவும் , உரிய விளக்க ஆணை வந்த வாரத்திலேயே  LSG  LIST  வெளியிடப்படும்" என்றும்  உறுதி அளித்துள்ளார்கள். இது குறித்தும்  திங்களன்று CPMG  அவர்களிடம் மீண்டும்  வலியுறுத்துவோம்.

மேலும் தற்போது வந்துள்ள  புதிய  விதிகளின்படி எதிர்வரும் 31.3.2016 வரையுள்ள  FINANCIAL  YEAR VACANCY  எதிர்வரும்  NOTIFICATION  இல் சேர்க்கப்படவேண்டும் என்பதால்  LSG  பதவி உயர்வு மூலம் காலியாகும் அனைத்து  எழுத்தர் பதவிகளும்  இந்த ஆண்டு காலி இட  அறிவிப்பில் சேர்த்திட  நிச்சயம் மாநிலச் சங்கம் முயற்சி எடுக்கும் என்றும் அதில்  வெற்றியும் பெறும் என்பதையும்   உங்களுக்கு  அறிவிக் கிறோம். இதன் மூலம் மாநில அளவில்  SHORTAGE  பிரச்சினை  வெகுவாக தீர்க்கப்படும். 

இந்த செய்திகளுக்கும் நம்முடைய போராட்ட அறிவிப்புகளுக்கும் தொடர்பு கிடையாது. மாநிலச் சங்கத்தின் தொடர் செயல்பாடுகள்  மற்றும் அதன் பலனாக கிடைக்கும் முன்னேற்றங்கள் குறித்த செய்தியே இது.

வேலை நிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட  போராட்ட அறிவிப்பு    தலைவர் களின் ஆலோசனையையும் மற்றைய  மாநிலச் செயலர்களுடன்  கலந்துகொண்டதன் பேரிலும்  திங்களன்று  வெளியிட முடிவெடுக்கப் பட்டுள்ளது.

INFORMAL MEETING WITH THE CPMG, TN ON 09.02.2015 BY 04.00 PM

AN INFORMAL MEETING  WITH THE  NFPE UNIONS (COC) WAS CALLED BY  CPMG, TN  ON 09.02.2015 BY 04.00 PM AT  HIS  CHAMBER. THIS WAS INFORMED BY THE ASST. DIRECTOR , SR, C.O. TODAY.

ALL  CIRCLE  SECRETARIES ARE REQUESTED TO ATTEND  THE  SAME  WITHOUT  FAIL.

= J. RAMAMURTHY,  CONVENER, NFPE COC, TN.

DECISIONS OF THE SOUTH ZONE NC JCM JCA MEETING HELD ON 05.02.2015 AT O/O SRMU, CHENNAI

JCM ( NATIONAL COUNCIL ) - JCA  
தென் பிராந்திய  (SOUTH ZONE)  ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள்  

கடந்த 05.02.2015 அன்று JCM (NATIONAL COUNCIL) இல் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் தென் பிராந்திய JCA  கூட்டம், சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள  SRMU  பொதுச் செயலரின் அலுவலகத்தில் மதியம் சுமார் 02.30 மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.  கூட்டத்திற்கு JCA  தென்பிராந்திய  CONVENER மற்றும்  SRMU சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். N . கண்ணையா அவர்கள்  தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் ரயில்வே பகுதியில் SRMU , பாதுகாப்புத் துறையில்  AIDEF  மற்றும் INDEF  சங்கத்தின் பிரதிநிதிகள்,  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பகுதியில்   INCOME TAX, CUSTOMS , AG'S OFFICE,  SHASTRI BHAVAN COC, RAJAJI BHAVAN COC, KALPAKKAM ATOMIC EMPLOYEES ASSOCIATION    மற்றும் அஞ்சல் பகுதியின் NFPE  , FNPO   சம்மேளனங்களின்  மாநிலச் செயலர்கள்  உள்ளிட்ட பல்வேறு  மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்   நிர்வாகிகள்  சுமார் 40 பேர்  கலந்துகொண்டனர்.

அஞ்சல் பகுதியில் இருந்து   NFPE  சார்பாக  COC  கன்வீனர் தோழர். J .R . NFPE  உதவிப் பொதுச் செயலாளர் தோழர்  ரகுபதி, அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் செயல் தலைவர்  தோழர். N .G ., RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.  ரமேஷ், RMS  நான்கின் மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன் , CASUAL  LABOUR சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் , NFPE  GDS  சங்கத்தின் மாநில உதவிச் செயலர்   தோழர். மகாலிங்கம் (பவானி) உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.  

கூட்டத்தில்  எடுக்கப் பட்ட முடிவுகள் :-

1. கூட்டத்தில் JCA  முறையாக  அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக  SRMU  வின் பொதுச் செயலாளர் தோழர். கண்ணையா அவர்களும் உறுப்பினர்களாக  AIDEF , INDEF சார்பாக  தலா ஒருவர்  , மகா சம்மேளனம் சார்பாக  தோழர். துரைபாண்டியன் , NFPE  சார்பாக தோழர். J . ராமமுர்த்தி FNPO  சார்பாக தோழர். குமார்  ஆகியோர் கொண்ட  CORE  COMMITTEE அமைக்கப்பட்டது.

2. எதிர்வரும் MARCH  15 ஆம் தேதிக்குள்  சென்னை காமராஜர் அரங்கத் தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்   முழு நாள் CONVENTION  நடத்துவது. அதில் தமிழகம்  முழுவதும் உள்ள  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 10,000 பேர் கலந்துகொள்ளச்  செய்வது.

3. எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக புது டெல்லியில்  ஏழாவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகள் , ரயில்வே, பாதுகாப்புத் துறையில் தனியார் மயம் , அஞ்சல் பகுதியில் CORPORATISATION இவற்றை எதிர்த்து   நடத்தப்பட உள்ள  மாபெரும் பேரணியில் நாடு முழுதும் இருந்து ஊழியர்களை திரட்டுவது.  உடனடியாக பயணத்திற்கான ரயில் முன்பதிவு செய்திட ஊழியர்களை  தயார் படுத்துவது.

4. மாவட்டங்கள் மற்றும் நகரங்களில்  அனைத்து மத்திய அரசு ஊழியர் அடங்கிய JCA  அமைப்பது. 

5.குறுகிய இடைவெளியில்  அடுத்த  CORE  COMMITTEE  கூட்டத்தை கூட்டி விவாதித்து   தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது .

மத்திய அரசு ஊழியர்களின் உடனடி அடிப்படை கோரிக்கைகளான  பஞ்சப்படி இணைப்பு, இடைக்கால நிவாரணம்  ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளதாலும் , தீவிரமாக  மத்திய அரசுப் பகுதியில் தனியார் மயம்  மற்றும் CORPORATISATION நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாலும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும்  இணைந்த தீவிர போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் தேவையானால் ஆயிரக் கணக்கில் ஊழியர்கள் சிறை நிரப்பவும் தயாராக வேண்டும் என்றும்  தோழர். கண்ணையா அவர்கள்  இறுதியாக  கேட்டுக்கொண்டார்.   கூட்டம்  மாலை 4.00 மணியளவில் முடிவுற்றது.

தோழர்களே ! அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு  தயாராக வேண்டியது  காலத்தின் தேவை.  அனைவரும் அதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட வேண்டுகிறோம். இணைந்த  சுற்றறிக்கை  JCA  சார்பாக விரைவில் வெளியிடப்படும்.

SOME PHOTOS OF THE SECRETARY DOP - PJCA LEADERS MEETING ON 40 POINT CHARTER OF DEMANDS

COM. N.SUBRAMANIAN, COM . THIYAGARAJAN, COM.R.N PARASHAR, COM.GIRIRAJ SINGH , COM . SURESH  AND OTHER LEADERS IN THE MEETING


COM. R. DHANARAJ, DY. GEN. SEC. AIPEU GDS NFPE SEEN SECOND FROM LEFT




SECRETARY POSTS AND  MEMBERS POSTAL SERVICES BOARD




MEETING OF LEADERS OF POSTAL JOINT COUNCIL OF ACTION WITH DG & POSTAL BOARD MEMBERS ON 05.02.2015

MEETING OF PJCA (COMPRISING NFPE,FNPO, AIPEUGDS(NFPE) AND NUGDS WAS HELD ON 40 POINTS STRIKE CHARTER OF DEMANDS WITH SECRETARY (POST) AT DAK BHAWAN NEW DELHI ON 05,02.2015.

MINUTES OF MEETING WILL BE EXHIBITED ON WEB-SITE AFTER RECEIPT FROM DEPT. OF POSTS.

NO FINAL SETTLEMENT ON ANY ISSUE HAS BEEN REACHED. EVEN THOUGH POSITIVE ASSURANCES HAVE BEEN GIVEN BY SECRETARY (POSTS)

            WE SHOULD CONTINUE OUR CAMPAIGN AND PREPARATIONS FOR INDEFINITE STRIKE FROM MAY 06th, 2015.

REGARDING GDS, SECRETARY (POST)   HAS AGREED TO RE-EXAMINE THE CASE FOR REFERRING THE REVISION OF WAGES AND OTHER SERVICE CONDITIONS OF GDS TO 7th C.P.C. WE HAVE TAKEN A FIRM STAND THAT WE DO NOT WANT SEPARATE COMMITTEE FOR GDS.

 SECRETARY GENERAL NFPE & FNPO, GENERAL SECRETARIES OF AFFILIATED UNIONS INCLUDING GDS UNIONS PARTICIPATED IN MEETING.

CONGRATS TO OUR CHIEF PMG SHRI. T. MURTHY ON HIS PROMOTION AS MEMBER (O), POSTAL SERVICES BOARD, NEW DELHI



தமிழகத்தின்  CHIEF  PMG யாக பணியாற்றிய மதிப்புக்குரிய  திரு. T. முர்த்தி  அவர்கள்  MEMBER (O) POSTAL  SERVICES  BOARD  ஆக  பதவி உயர்வு பெற்று புது டெல்லி  செல்கிறார்.  அவருக்கு தென் சென்னை  அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்  இதயங்கனிந்த  நல் வாழ்த்துக்கள் !