AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Tuesday 23 July 2013

இண்டர்நெட் மூலம் 'மணி ஆர்டர்' சேவை: தபால் துறை புதிய திட்டம்

இண்டர்நெட் மூலம் 'மணி ஆர்டர்' சேவை: தபால் துறை புதிய திட்டம்
சென்னை, ஜூலை 23–
தபால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் விரைவாக பணம் அனுப்பலாம். ஒரு நாளில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமான மணி ஆர்டர் சேவையில் இரண்டு 3 நாட்கள் வரை ஆகும்.

இந்த நிலையில் இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும். பெறவும் முடியும்.
குறைந்த கட்டணத்தில் ரூ.50 ஆயிரம் வரை பணம் அனுப்பலாம். அஞ்சல் நிலையங்களில் இதற்காக உள்ள சேவை மையங்களில் பணம் அனுப்பும் நபருக்கு 16 இலக்க எண் வழங்கப்படும். யாருக்கு பணம் அனுப்புகிறாரோ அவருக்கு அந்த எண்ணை இ–மெயில், செல்போன் மூலம் அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும்.

பணம் பெறுபவர் தன் அடையாள அட்டை மற்றும் 16 இலக்க எண்ணை தபால் நிலையங்களில் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் அனுப்புவதும் பெறுவதும் எளிதாக இருக்கிறது.

இந்த சேவையில் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அனுப்ப ரூ.100 கட்டணம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.110 கட்டணம். அதற்கு மேல் ரூ.50 ஆயிரம் வரை ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று சென்னை மண்டல தபால் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - மாலை மலர்

No comments:

Post a Comment