AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday 19 June 2014

Long pending Higher rate of HRA problem settled by Circle Union

நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முயற்சியால் சென்னை பெருநகரமண்ட லத்தில்  நீண்ட காலமாக வழங்கப் படாமல் இருந்த  உயர் வீட்டு வாடகைப்படி  தென் சென்னை//தாம்பரம்  கோட்டத்தில்  கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு  நிலுவைத் தொகையுடன் வழங்கிட உத்திரவு இடப்பட்டுள்ளது. ( 09.11.2010 முதல் வழங்கப்படும்- கீழே பார்க்க உத்திரவு நகலை )

தென் சென்னை :-
1. சோளிங்கநல்லூர்   2. பாலவாக்கம்  3. காரப்பாக்கம்  4. ஒக்கியம் துரைபாக்கம்  5. ஈஞ்சம்பாக்கம் 

தாம்பரம் :- 1. பள்ளிக்கரணை 

இந்தப்  பிரச்சினை நம் மாநிலச் சங்கத்தால் ITEM  NO . 31 இன் படி RJCM இல் பிரச்சினையாக வைக்கப் பட்டு  மேல் நடவடிக்கைக்காக CPMG  இடம் பதிலும் பெறப்பட்டு, அந்த பதிலின் நகல்  ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில்  நம் அகில இந்திய சங்கத்திற்கும்  இந்த பிரச்சினை எடுக்கப்பட்டு  DIRECTORATE  உத்திரவும் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து  கடிதம் எழுதி  உத்திரவை பெற்றுத் தந்த நம் அகில இந்திய சங்கத்திற்கும், மாநிலச் சங்கத்திற்கும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்த்திட முயற்சிகள் மேற்கொண்ட PMG , CCR  அவர்களுக்கும்  நம் நன்றி உரித்தாகும்.

N.இராஜேந்திரன் 
செயலர் 

No comments:

Post a Comment