AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Saturday 5 July 2014

ஊழியர் நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானம் மிக்க நமது PMG CCR திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு மீண்டும் நம் நன்றி!

THANKS TO PMG, CCR FOR HIS SWIFT ACTION IN HELPING AN OFFICIAL IN DISTRESS !


தென் சென்னை நமது கோட்டத்தின் நங்கநல்லூர் அஞ்சலகத் தலைவர் தோழர். R.துரைசாமி அவர்களின் மகன் கடந்த 26.06.2014 அன்று பல்லாவரத்தில் சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டு உடன் அங்கிருந்தவர்களால் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் அருகில் இருந்த தீபம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்..

அவருக்கு CGHS APPROVED இல்லாத தனியார் மருத்துவ மனையில் சேர்த்ததாக காரணம் கூறி MEDICAL ADVANCE நிறுத்தப் பட்டிருந்ததை உடனடியாக மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடன் மாநிலச் செயலர் தோழர்.JR  இந்தப் பிரச்சினையை சென்னை பெருநகர மண்டல PMG திரு மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று உதவிட வேண்டினார். 

பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட   2.00  மணி நேரத்தில் PMG  CCR அவர்கள் உடன் மேல் நடவடிக்கை எடுத்து EMAIL மூலம் உத்திரவு  அளித்து பாதிக்கப் பட்ட ஊழியருக்கு ரூ. 2,50,000/-மருத்துவ முன்பணம் வழங்கிட ஆவன செய்தார். பாதிக்கப் பட்ட ஊழியரின் இன்னல்களை உணர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த PMG  CCR திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு நம் கொட்டச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி. உடன் இந்த பிரச்சினையில் ஈடுபட்டு மருத்துவ முன் பணம் கிடைத்திட ஆவன செய்த DPS CCR  திரு. J .T. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும், ASST DIRECTOR  STAFF  திரு.  பாலச்சந்தர் அவர்களுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.கணேசன் அவர்களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு  நம் மாநிலச் செயலர் தோழர்.J .இராமமூர்த்தி அவர்களுக்கும் நமது கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஊழியர் நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானம் மிக்க இது போன்ற அதிகாரிகள் இருந்தால் நிச்சயம் இலாக்காவில், ஊழியர்-அதிகாரிகள் நல்லிணக்கம் ஏற்பட்டு இலாக்கா சேவையில் ஊழியர்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்படும். சேவையும் மேம்படும். தொழில் அமைதியும் மேம்படும் என்பது உண்மையாகும். திரு. மெர்வின் அவர்களுக்கு மீண்டும் நம் நன்றி. தோழர். R. துரைசாமி அவர்களின் மகன் விரைவில் குணமடைய தென் சென்னை கோட்டச் சங்கம் வாழ்த்துகிறது!

N. ராஜேந்திரன் 
செயலர் 

No comments:

Post a Comment