AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Saturday, 30 August 2014

சம்மேளன பொதுசெயலர் தோழர் M .கிருஷ்ணன் அவர்களின் பணிநிறைவு!

COM: M.KRISHNAN, SECRETARY GENERAL, NFPE & CONFEDERATION & GENERAL SECRETRY, AIPEU GROUP-C (CHQ) RETIRES FROM SERVICE ON SUPERANNUATION ON 31-08-2014


அன்பார்ந்த தோழர்களே !
            31.08.2014 இன்று இலாகா பணிநிறைவு பெறும்  அகில இந்திய அஞ்சல் ஊழியர் குரூப் "சி" பொதுசெயலரும், நமது சம்மேளன பொதுசெயலர் தோழர் M .கிருஷ்ணன் அவர்களை தென் சென்னை  கோட்ட சங்கம் வாழ்த்துகிறது. 


-N .ராஜேந்திரன் 
       செயலர்   

Sunday, 24 August 2014

அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராகதமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்!

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  



நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை. 

இவரது பணி  சிறக்க  நம் தென் சென்னை கோட்ட  அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 





Saturday, 16 August 2014

தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா!

FELICITATION FUNCTION TO COM. K.NARAYANAN, EX-REGL. SEC., SOUTHERN REGION

தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 

தோழர் K .நாராயணன்(முன்னாள் மண்டல செயலர், தென் மண்டலம்) அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 15.08..2014 அன்று மதுரையில் சிறப்பாக  நடைபெற்றது .  தோழர்கள் K.V.S.  ( முன்னாள் பொது     செயலர்) 
A .வீரமணி (நிதிச் செயலாளர் ) S.K.ஜேக்கப்ராஜ் (மாநில உதவி செயலர்) R.குமார் (மத்திய மண்டல செயலர் ) S.சுந்தரமுர்த்தி (மதுரை கோட்ட செயலர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.