மத்திய சென்னை , தென் சென்னை , தாம்பரம் உள்ளிட்ட சென்னை பெருநகர மண்டலம் சார்ந்த கோட்டங்களில் MINUS BALANCE பிரச்சினையில் பல தோழர்கள்/தோழியர்கள் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான ரூபாய் ஊதியப் பிடித்தம் செய்திட உத்திரவிட்டதை எதிர்த்து நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் பிரச்சினையை பலமுறை PMG, CCR மற்றும் CPMG அவர்களிடம் கொண்டு சென்று ஊதியப் பிடித்தம் செய்திடாமல் நிறுத்திவைத்தது.
கடந்த 28.2.2014 இல் இது குறித்து, சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி ஒரு நீண்ட கடிதத்தை அளித்து PMG, CCR அவர்களிடம் பேசி அதற்கு இறுதியாக அவர், சட்ட விதிகளுக்கு மாறான, பிரச்சினைக்கு உள்ளான MINUS BALANCE CASE களை பரிசீலித்து 'WRITE OFF' செய்திட பரிந்துரைப்பதாக உறுதியளித்தார் .
அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தற்போது CCR மண்டலத்தில் மொத்தம் ரூ. 43,54,035.00 க்கு 'WRITE OFF' செய்திட உத்திரவு பெறப்பட்டு அது செயலாக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக, தென் சென்னை கோட்டத்தில் ST . THOMAS MOUNT , MADIPPAAKKAM , NANGANALLUR உள்ளிட்ட பல அலுவலகங்களிலும் இந்த உத்திரவு அமலாகிறது.
இப்படி பெரிய அளவில் 'WRITE OFF' பெறுவது இதுவே முதன் முறையாகும்.நம் கோரிக்கையை ஏற்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ரூ.43.5 லட்சம் 'WRITE OFF' பெற்றுத் தந்த நமது சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின் அலெக்சாண்டர் IPS அவர்களுக்கும், நம் கோரிக்கையை ஏற்று அது வெற்றி பெற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டு ஊழியர்களின் துயரை துடைத்த நம் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J. இராமமூர்த்தி அவர்களுக்கும், நமது கோட்ட மட்டத்தில் உதவி புரிந்த MINUS BALANCE SQUAD IN CHARGE தோழர் C .கருணாகரன் (முன்னால் மாநில உதவி செயலர்) அவர்களுக்கும், தென் சென்னை கோட்ட ஊழியர்கள் சார்பாகவும் கோட்ட சங்கத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
N .ராஜேந்திரன்
செயலர்
No comments:
Post a Comment