கடந்த 11.7.2016 அன்று தன் விருப்ப ஒய்வு பெற்ற தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் அரசுப் பணி நிறைவுப் பாராட்டு விழா கடந்த 31.7.2016 ஞாயிறு அன்று சென்னை CHIEF PMG அலுவலக வளாகத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். P .மோகன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை வடகோட்டத்தின் சார்பில் அதன் செயலர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் அவர்கள் தலைமையில் வட கோட்டத் தோழர்கள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் NFPE இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தோழர். AGP, தோழர். K .R. , தோழர். KVS , தோழர் . கண்ணையன் , உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் முன்னாள் - இந்நாள் சம்மேளன, அகில இந்திய, மாநில, கோட்டச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு.
No comments:
Post a Comment