தோழர்களே!
நமது கோட்ட சங்கத்தின் 27வது ஆண்டு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் குறித்த கடிதத்தை முதுநிலை கண்காணிப்பாளரிடம் 29.05.2013அன்று கொடுக்கப்பட்டது. கோட்ட செயலர் தோழர் N.இராஜேந்திரன் அவர்களுடன் தோழர்கள் V.வெங்கட்ராமன் (மாநிலதுணைதலைவர்), நிதி செயலர் G.ரவி, துணை தலைவர் R.கனகவேல், உதவி செயலர் K.கந்தசுப்ரமனியன், அமைப்பு செயலர் A.சர்புதீன் மற்றும் G.அருண்பிரகாஷ் உடன் இருந்தனர். பல முக்கிய கோட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தோழர் குமார் திருவான்மியூர் Treasurerஆக order போடப்பட்டும் நீண்ட காலமாக அவரை ஈஞ்சம்பாக்கதில் இருந்து விடுவிக்காமல் (மாற்றாமல்) கிடப்ப்பில் போடப்பட்டுள்ளதற்கான தடைகளை யார்? ஏற்படுத்துகிறார்கள் என்பதனை விளக்கமாக எடுத்துரைத்த பின் இன்று தோழர் குமார் அவர்கள் திருவான்மியூர் Treasurerஆக charge 29.05.2013 அன்று எடுத்துள்ளார். ஆகவே SSPஅவர்களுக்கு கோட்ட சங்கத்தின் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மாநில சங்க மாநாட்டிற்கு வரும் தோழர்கள் செயலரிடம் பெயரை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
- N .இராஜேந்திரன்
செயலர்