AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday, 17 October 2014

CHIEF PMG, TN அவர்களுக்கு NFPE சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

CHIEF  PMG, TN  அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் 
தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் 
நெஞ்சார்ந்த நன்றி !

          அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். கடந்த 24.09.2014 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் சார்பிலும் , நம்முடைய அஞ்சல் மூன்றின்  பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுடன்  நாம் சென்று சில பிரச்சனைகளை அளித்து விவாதித்த விபரம் ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 1 ந் தேதி அன்று வெளியிட்டிருந்தோம். அதில் நாம் அளித்திருந்த ஏழு கடிதங்களில் , இரண்டு பிரச்சினைகளுக்கு  நமது CHIEF  PMG அவர்கள் தற்போது தீர்வளித்துள்ளார்.

1.   தபால் காரர்  தேர்வில் வெற்றிபெற்றிருந்தும்  நீதி மன்ற வழக்கின் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக  நிலுவையில் இருந்த  10 க்கும் மேற்பட்ட GDS  ஊழியர்களுக்கு பணி  நியமன உத்தரவு.

          2012 க்கான தபால்காரர் தேர்வு 2013 ஏப்ரல் திங்களில் நடைபெற்றது.  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு  ஆங்காங்கே  பல GDS ஊழியர்கள் பணி  நியமனம் பெற்றனர். ஆனால் ANSWER  KEY தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய மாநிலச் சங்கத்தால் REVALUATION செய்திட பிரச்சினை கடந்த 23.09.14 இல்  எழுப்பப் பட்டது.(பார்க்க மாநிலச் சங்க வலைத்தளச் செய்தி - செப். 2013 ) 

                இதன் காரணமாக  மாநிலமெங்கும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு  விடைத்தாள் மறு மதிப்பீடு செய்து REVISED  RESULT அளிக்கப்பட்டது. ஏற்கனவே பணி  நியமனம் பெற்ற தோழர்கள்  தங்களின் பணி  நியமனத்தை ரத்து செய்திடக் கூடாது என்று கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றனர் . இதனால் உரிய காலிப் பணியிடம் இல்லை என்றும் தடை ஆணை உள்ளதென்றும்  முறையாகத் தேர்வு பெற்ற இந்த GDS  ஊழியர்களுக்கு  தபால்காரர் பதவி அளிப்பது நிறுத்தப் பட்டிருந்தது. 

                 இந்தப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட தோழர். முத்துராமன் என்பவரை ஆதாராமாகக் கொண்டு ,  பலகாலமாக நம்மால் எழுப்பப் பட்டாலும் , நீதி மன்ற வழக்குகள் முடிவடையாத காரணத்தால் சிக்கல் தீரவில்லை. எனவே 2014 க்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கும் தேர்வு நடைபெற உள்ள சூழலில் , 2013 இல் முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப் படாததை சுட்டிக் காட்டி நாம் CHIEF  PMG அவர்களிடம் பேசினோம். பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்த  CHIEF  PMG அவர்கள், உரிய சட்ட ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பதாக அறிவித்தார். 

          இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு ஆவணங்களை நமது APMG, RECTT  திரு. N . ரவி அவர்களிடமும் அளித்துப் பேசினோம். இவற்றை  CHIEF  PMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார் . அதன் பேரில்  பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு  தற்போது பாதிக்கப்பட்டஅனைத்து ஊழியர்களுக்கும் உடனடி பணி  நியமனம் வழங்கிட நமது CHIEF  PMG அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. உத்திரவின் நகலை கீழே பார்க்கவும். இந்தப் பிரச்சினையின்  தன்மையை புரிந்து கொண்டு பரிவுடன் முடிவினை எடுத்த நமது CHIEF  PMG  உயர்திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , பிரச்சினை தீர்ந்திட உறுதுணையாக இருந்த  APMG, RECTT  திரு. N .ரவி   அவர்களுக்கும்   நமது அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2.  ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலரின் இட மாற்றம் ரத்து. 

          ராமநாதபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர்   தோழர். ஜனார்த்தனம் அவர்கள் , LSG  என்பது CIRCLE  CADRE  என்று காரணம் காட்டி  ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் இருந்து பரமக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு கடந்த RT  இல் மாற்றிட உத்திரவிடப்பட்டார். இது குறித்து ஏற்கனவே நம்முடைய தென்  மண்டலச் செயலர் தோழர். தியாகராஜ பாண்டியன் அவர்களும் மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும்  தென் மண்டல PMG யுடன்  பேசியும் பிரச்சினை தீராததால் இந்தப் பிரச்சினையை மாநிலச் சங்கம் மூலம்   நம்முடைய CHIEF  PMG அவர்களிடம் கடந்த 24.09.2014 அன்று நடைபெற்ற நேர் காணலில் எடுத்துச் சென்றோம்.(பார்க்க மாநிலச் சங்கத்தின் கடித நகல் - வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்ட தேதி : 01.10.2014) . 

            தென் மண்டலத்தில் எடுக்கப் பட்ட நிலைப்பாடு  சட்ட விதிகளுக்கு மாறானது என்பதை சுட்டிக் காட்டினோம். CHIEF  PMG அவர்களும், உடன் இது குறித்து தென் மண்டல அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அதன் படியே தென் மண்டல  நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. நம்முடைய மாநிலச்செயலர்  தென் மண்டல இயக்குனருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இயக்குனர் அவர்களும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இரண்டு நாட்களில் TRANSFER  COMMITTEE ஒப்புதல் தரப்பட்டு ,  அவரது பரமக்குடி  இட மாறுதல் ரத்து செய்யப் பட்டு , ராமநாதபுரம்  தலைமை அஞ்சலகத்தில்  வேறு ஒரு LSG  பதவிக்கு மாறுதல் அளிக்கப் பட்டார். 

           இந்தப் பிரச்சினையில் உடன் தலையிட்டு தீர்த்து வைத்த நம்முடைய CHIEF  PMG உயர்திரு . T. மூர்த்தி அவர்களுக்கும் , தென் மண்டல இயக்குனர்  திருமதி. நிர்மலாதேவி அவர்களுக்கும்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தென் மண்டலத்தில் இனி வரும் நாட்களில் நல்ல சூழல் அமைந்திட  இது போன்று ஒரு நல்ல அணுகுமுறையை நம்முடைய இயக்குனர் அவர்கள் தருவார் என்று நிச்சயம் நம்புகிறோம்.

          இந்த சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பிரச்சினைகளை  மாநில தலைமை அதிகாரிடம் பேசித் தீர்வு காண வழி வகுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றியினை பதிவு செய்கிறோம்.

Tuesday, 14 October 2014

'சொந்தக் காசில் சூனியம்' வைக்கலாமா ?

அஞ்சல் துறையின்  வியாபார யுக்தி  அபாரம் !
வணிகப் பெருக்கம் அமோகம் !
இனி எந்த ஒரு ஊழியரும் ஊதியமே வாங்க வேண்டாம் !
மாதம் 100 RD கணக்குகள்  அவரவர் பெயரிலேயே  துவக்குங்கள் ! 
ஆனால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டாம் ! 
PASS  BOOK போட வேண்டாம் !
( சும்மா கணக்கு எண்ணிக்கைக்குத் தானே !)

கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள்  வணிகப் பெருக்கம் என்ற 
பெயரில் கணக்குக் காட்ட  'பினாமி' யாக  RPLI  POLICY  உங்கள் பணத்திலேயே போடுங்கள் ! 

மாதா மாதம் PREMIUM  கட்ட வேண்டாம் ! 
ஆனால் மாதா மாதம் புதிது புதாதாக 'பினாமி ' பாலிசி போடுங்கள் ! 
பாலிசி எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டாமா ! 
கீழ் மட்ட அதிகாரிகள் உயர் மட்ட அதிகாரிகளிடம்  AWARD  வாங்க வேண்டாமா ! 

70%  பாலிசி க்கள்  இறந்து போனாலென்ன ?  
ஒவ்வொரு பாலிசி க்கும்  இலாகாவுக்கு  ரூ. 420/- செலவு ஆகிறதாம் ! 
ஆனால் நீங்கள் ரூ.15.00 க்கு WHOLE  LIFE  POLICY  ஆக மாதம்
100 பாலிசி போடுங்கள் ! வியாபார அபிவிருத்தி தானே ! 

ஒட்டு மொத்தத்தில் ரூ.15.00 வரவு ரூ. 420.00 செலவு . 
இது இலாக்கா ஆண்டு இறுதியில் கணக்கு எடுக்குமபோதுதானே 
தெரிய வரும் ! 

அது பற்றி நமக்கென்ன கவலை !
இருக்கவே இருக்கு இலாக்கா நட்டத்தில் இயங்குகிறது ! 
எல்லாரும்  BELT  ஐ இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்ற கோஷம் !

உங்களுக்கு நீங்களே  'MY   STAMP' போட்டுக் கொள்ளுங்கள் ! வீட்டில் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளிடம் காட்டி பெருமை அடையுங்கள் !
வியாபாரம்  அபிவிருத்தி  அடைய வேண்டாமா ? 

நீங்களே PHILATELY  DEPOSIT  ACCOUNT உங்கள் பெயரிலேயே ஆரம்பித்துக் கொள்ளுங்கள் ! நீங்களே  வாங்கிய 
STAMP  ஐ கவுன்டரில் விற்றுக் கொள்ளுங்கள் ! 
வியாபார அபிவிருத்திதானே ? அமோகமாக  இலாக்காவுக்கு லாபமில்லையா ?

IMO பெருக வேண்டுமா ? உங்களுக்கு நீங்களே  MONEY  ORDER  BOOK   செய்யுங்கள் ! உடனடி பட்டுவாடா  என்று RECORD  செய்யுங்கள் ! பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுங்கள் ! 
எல்லாம் வியாபார அபிவிருத்தி அல்லவா ?

EPOST  'புடியுங்கள்' ! அல்லது உங்களுக்கு நீங்களே செலவு 
செய்து EPOST  அனுப்பி  அகமகிழ்ந்து கொள்ளுங்கள் !  

உங்கள் ஊதியப் பணத்தை குடும்பத்திற்கு ஏன் விரயம் செய்கிறீர்கள் ? இலாக்காவுக்கு லாபம் ஈட்ட இப்படியான உக்திகளை கையாளுங்கள் ! நிச்சயம்  லாபம் தான்  ! முடிந்தால் தனியார்  AGENCY  முறை மூலம் பெறும் பொருட்களை நீங்களே  வாங்கிக் கொள்ளுங்கள் !   

இப்படி தீவிரமாக BUSINESS  செய்துகொண்டிருக்கும் போது , 
பசி எடுத்தால்  நீங்கள் வெளியே சென்று  சாப்பிடாதீர்கள் ! 
உங்களுக்குள் நீங்களே   ஒருவரை ஒருவர் கடித்து  பசியாறுங்கள் !  அல்லது பசி எடுத்தால்  தன் சதையையே தானே 
கடித்து பசியாறுங்கள் !  பசி தீர்ந்து விடும் !
இலாகாவின் வணிகப் பசி இப்படித்தானே தன்  ஊழியரையே 
தான் கடித்து தன் பசி ஆறுகிறது ?

இவையெல்லாம்  வணிக வளர்ச்சி கூட்டங்களில் மேலதிகாரிகள் கீழதிகாரிகளுக்கு  அளித்திடும் INNOVATIVE  BUSINESS  
DEVELOPMENT  உக்திகளாகும்.  

இல்லையென்றால் , நாங்கள் மேல சொன்னவற்றையெல்லாம் கீழ் அதிகாரிகள் சுற்றறிக்கையாக , கிளை / துணை அஞ்சலகங்களுக்கு அனுப்புவார்களா ? அப்படி அனுப்பினார்கள் என்றால் , நிச்சயம் இவை மேலதிகாரிகள் அளித்த  ஆலோசனைகள் தானே ?   
வாழ்க அஞ்சல் துறை ! வளர்க வணிகப் பெருக்கம் ! 

இனி RECRUITMENT  NOTIFICATION  போடும்போது:

 'சொந்தக் காசில்  வணிகம் செய்து வியாபார அபிவிருத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் ' 
என்று  NOTIFICATION செய்தால்  நன்றாக இருக்கும் !. 
அல்லது 'சொந்தக் காசில் சூனியம்' வைத்துக் கொள்ள 
விருப்பமிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்  என்று அறிவிக்கை செய்திடவும் !  இலாக்கா இப்படியே போனால்  நன்றாக வளரும் ! 
அதில் ஊதியம் பெறும்  நாமும்  வளர்ச்சியடைவோம் !

மேலே கண்ட விபரங்கள் எங்களால் ஏனோ தானோ என்று வேண்டா வெறுப்பில் சொல்லப் படவில்லை ! கண்டதைத்தான் சொல்லுகிறோம் ! 

 கீழே பார்க்க ஒரு உதாரணம் ! 
இது போல  பல கோட்டங்களில்  நடக்கிறது ! 
  
இதில் அதிகமாக  திருச்சி மற்றும்  மதுரை மண்டலங்களில் இருந்துதான்  நிறைய புகார்கள் 

உண்மையான அக்கறை உள்ள மேல் அதிகாரிகள்  
நிச்சயம் இருக்கிறார்கள் ! 

அவர்கள் பார்வைக்கு இந்த வலைத்தளம் மூலம் இது சென்றால் , அவர்களும் உடன்  இதன் மீது நடவடிக்கை எடுத்தால் ,   
REAL  BUSINESS  என்பதை நோக்கி  நாம் சென்றால் , 
நிச்சயம் இலாகா வளர்ச்சி பெறும் ! 
அந்த திசை நோக்கி  நாம் சிந்தித்தால்  அது  நமக்கும் , 
இலாக்காவுக்கும்  நிச்சயம் நல்லது! 

விமரிசனம் செய்வது மட்டும்  நம் நோக்கமாக இருக்க முடியாது !
இலாக்காவில்  ஊதியம் பெறும்  ஊழியர் என்ற வகையில் 'நமக்கு சோறிடும் கோவிலை இடிக்காதீர் ' என்று இடித்துரைக்கவும், உண்மையான வணிகம் புரிந்திடுங்கள் !என்று  வழி காட்டவும் 
நமக்கு கடமை இருக்கிறது !

மேலதிகாரிகள்  தலையிடுவார்களா ? பார்ப்போம் !

Monday, 13 October 2014

புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்!


தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்! 

தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் 29 வது மாநில மாநாடு கடந்த 10.10.2014 முதல் 11.10.2014 வரை திருப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நடைபெற்ற மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் சேலம் தோழர் ஜெயராஜ் மாநிலத் தலைவராகவும், கோவில்பட்டி தோழர் ஜி . கண்ணன் மாநில செயலராகவும், நமது தென் சென்னை கோட்டத்தை சேர்ந்த தோழர் S.இரவிச்சந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தென் சென்னை கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

N .ராஜேந்திரன் 
செயலர்