அன்புள்ள NFPE இன் அனைத்து சங்கங்களின் மாநிலச் செயலர்களே! அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகளே !கோட்ட/ கிளைச் செயலர்களே !
வணக்கம் !
நாளைய தினம் CPMG அலுவக வாயிலில் நடைபெற உள்ள தார்ணா போராட்டத்தில் தாங்கள் அனைவரும் முழுமையாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இது மகா சம்மேளனத்தினால் நடத்தப் பட உள்ள மூன்றாவது கட்ட போராட்டம். எனவே ஊழியர்களை பெருமளவில் திரட்டி போராட்டம் சிறக்க உதவிட வேண்டுகிறோம்.
இந்தப் போராட்டத்தில் நம்முடைய மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். M. கிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிட உள்ளார்கள் .
எனவே சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
உங்கள் வரவால் அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகம் நிரம்பட்டும் ! போராட்டம் சிறக்கட்டும் !
சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள ITEF சங்கத்தின் அறையில் இன்று 17.11.2014 காலை 11.00 மணியளவில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
கலைஞர் TV, தந்தி TV, வேந்தர் , புதிய தலைமுறை , இமயம் , தமிழன், ஜெயா , பாலிமர் உள்ளிட்ட ELECTRONIC MEDIA க்கள் , தினமலர், தினகரன், தி ஹிந்து , தினத்தந்தி உள்ளிட்ட PRINT மீடியாக்கள் சார்ந்த நிருபர்கள் கலந்துகொண்டார்கள். இந்த சந்திப்பு நிகழ்வு தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
கீழே இடமிருந்து வலம் : தோழர். R.B. சுரேஷ் , அஞ்சல் கணக்குப் பிரிவு, தோழர். S . சுந்தரமூர்த்தி, பொருளர் , தோழர். J . இராமமூர்த்தி , தலைவர், தோழர். M . துரைபாண்டியன் , பொதுச் செயலர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தோழர். M .S . வெங்கடேசன், பொதுச் செயலர், ITEF , தோழர். சாம்ராஜ், CONVENER , COC ,சாஸ்திரி பவன் ஊழியர்சங்கங்கள் .
No comments:
Post a Comment