AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday, 27 November 2014

PRE APPOINTMENT BEFORE PTC, TRAINING TO DIRECT RECTT. PAS - ORDERS OF THE DEPT.

SHORTAGE  OF  STAFF  பரவலாக இருக்கின்ற காரணத்தினால் 2014 அஞ்சல் நேரடி எழுத்தர் பணி  நியமனம் என்பது (2010 ஆம் ஆண்டின் காலியிடங்களுக்கு  2012இல் வழங்கியது  போல )  PTC  பணிப்  பயிற்சிக்கு செல்வதற்கு முன்னர் பணி  நியமன உத்திரவு  வழங்கிட வேண்டும் என்று இலாக்கா  உத்திரவிடக் கோரி  நம்முடைய பொதுச் செயலரை நாம் வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

அவரும் இலாக்கா முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதிக் கோரியிருந்தார் என்பதும் அது நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். இது குறித்து இலாக்காவில் ஏற்கனவே முடிவெடுக்கப் பட்டிருந்தாலும் அந்த உத்தரவு வெளியிடப் படாமல்  தற்போது, நமது கோரிக்கைக்குப் பின்னர் 14.11.2014 அன்று வெளியிடப்பட்டு அதன் நகல் நம் அகில இந்திய சங்கத்திற்கு வழங்கப் பட்டிருக்கிறது.

இதன் மூலம்  PRE APPOINTMENT  FORMALITIES (அதாவது  POLICE  VERIFICATION, CERTIFICATE  VERIFICATION ) முடிந்த  SELECTED CANDIDATE களுக்கு  IN-HOUSE TRAINING  அளித்து அவர்களுக்கு பணி  நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC  இல் ஒவ்வொரு SESSION  இலும் எவ்வளவு காலியிடம்  இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம்  அறிவிக்கப் படும்போது TRAINING  செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER  SHORTAGE  உள்ள கோட்டங்களும், RULE  38 இடமாறுதல்  இடப்பட்டு  PENDING  உள்ள ஊழியர்களும்  சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின்  நகல் கீழே காண்க :-



No comments:

Post a Comment