தாம்பரம் கோட்டத்திலிருந்து PSD சென்னை க்கு DEPUTATION அனுப்பப்பட்ட தோழியரின் பிரச்சினையை மாநிலச் சங்கம் மண்டல மற்றும் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. கீழே காணும் கடிதம் இன்று மதியம் சுமார் 03.00 மணியளவில்தான் CPMG க்கு அளிக்கப்பட்டது. உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு CPMG அவர்களும் சென்னை பெருநகர மண்டல நெறியாளர் திரு. கோவிந்தராஜன் அவர்களும் தீர்வு தந்துள்ளார்கள்.
இன்று மாலையே அந்தத் தோழியர் உடனடியாக பணியில் தாம்பரம் கோட்டத்தில் அதே இடத்தில் சேர உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. உடன் தலையிட்டு தீர்வு தந்த CPMG அவர்களுக்கும் , DPS CCR அவர்களுக்கும் நம் நன்றி !
No comments:
Post a Comment