தமிழகம் தழுவிய முதற்கட்டப்
போராட்டம் மாபெரும் வெற்றி !
ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் E-COM/E-TAIL/SP பட்டுவாடா பணிக்கு ஊழியர்களை பணித்து இடப்பட்ட அஞ்சல் இலாக்காவின் தொழிலாளர் விரோத , மனித உரிமை மீறலான உத்திரவை ரத்து செய்திடக் கோரி தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் கூட்டுப் போராட்டக் குழு சார்பாக அறிவிக்கப்பட்ட முதற்கட்டப் போராட்டமான கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுவரை இந்தப் போராட்டம் சம்பந்தமாக கோட்ட/கிளைகளில் இருந்து நமக்கு வந்துள்ள புகைப்படங்களை கீழே உங்களின் பார்வைக்குத் தருகிறோம். இன்னும் பெரும்பகுதியான கிளைகளில் இருந்து புகைப்படம்/ கிளை செயலர்களுக்கும் அனுப்புவதாக மாநிலச் சங்கத்திற்கு கைபேசி மூலம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த எழுச்சி, ஊழியர்களின் எதிர்ப்புணர்வை இலாக்காவுக்கு சரியாக தெரிவிக்கிறது . பெரும்பகுதி ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிர்வாகம் உடன் இந்த உத்திரவை ரத்து செய்திட வேண்டும் என்று கூட்டுப் போராட்டக் குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
முதற்கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அனைத்து பகுதி நிர்வாகிகளுக்கும், கோட்ட/கிளைச் செயலர்களுக்கும், போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்/ தோழியர்களுக்கும் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உத்திரவு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை எனில் JCA கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
No comments:
Post a Comment