AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday 1 November 2013

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


பட படவென பட்டாசுகள் வெடிக்க
சட சடவென மத்தாப்புகள் பொரிய 
தித்திக்கும் இனிப்புகளால் இல்லம் நிறைய 
பளபளக்கும் தீப ஒளியில் உள்ளம் மலர 
மங்கள வாழ்த்தொலி எங்கும் பரவட்டும் 
மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் திளைக்கட்டும் 
தீப ஒளி திருநாளில் எல்லோரும்
எல்லா நலமும் வளமும் பெற்று 
வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துவோம்… 
அதிரடி வேட்டுச் சத்தம் 
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘சினிமா’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி!

-- N .ராஜேந்திரன்
செயலர்  

No comments:

Post a Comment